புதன், டிசம்பர் 16, 2015

‘எல் நினோ’ ஏற்படுத்திய பாதிப்பா? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?


மிழகத்தை சமீபத்தில் உலுக்கியெடுத்த பெருமழைவெள்ளத்தை அடுத்து பதற்றத்துடன் உச்சரிக்கும் வார்த்தை எல் நினோ’. மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு அதுதான் காரணம் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் கிழக்கில் வெப்ப மண்டலப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறைகடல்மட்ட வெப்பம் சராசரி அளவைவிட2 - 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். இதையொட்டிகடலுக்கு மேற்பகுதியில் உள்ள காற்றின் வெப்பமும் உயரும். இதுவே எல் நினோ எனப்படும். எல் நினோ’ என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு குழந்தை ஏசு’ என்று பொருள். பொதுவாக கிறிஸ்துமஸை ஒட்டியே நிகழ்வதால் இந்தப் பெயர் பெற்றது.
எல் நினோ விளைவால்பசிபிக் கடலின் நீரோட்ட வெப்பம் அதிகரிக்கும்போதுநீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. அதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய காற்று ஆசியப் பகுதியை அடையும்போதுதமிழகத்தின் தென்மேற்குப் பருவமழையை பலவீனப்படுத்தும். அதன் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை வலுவடையும்.
இதனால் இந்திய வானிலையில் அசாதாரண மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அசாதாரணமான மழைப்பொழிவு இருக்கும் என இஸ்ரோ எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால்இந்திய  வானிலை ஆய்வு மையம் மட்டும் டி.வி மைக்குகள் முன் அமர்ந்து கொண்டு, ‘அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புகனமான மழையோ,லேசான மழையோ பொழிய வாய்ப்பு உண்டு’ என்று சொல்லிக்கொண்டு இருந்தது.

அதே சமயம்சென்னையில் இந்த ஆண்டு பெய்த அதிகப்படியான மழைக்குக் காரணம் எல் நினோவின் தூண்டுதல் என்கிறார்,அமெரிக்காவின் வர்த்தக ரீதியான வானிலை ஆய்வு மைய (Weather underground) விஞ்ஞானி  பேராசிரியர் டாக்டர் ஜெப் மாஸ்டர்ஸ். இவர்அமெரிக்க அரசின் தேசியக் கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு  மையத்துடன் இணைந்து 1986 முதல் 1990 வரை சூறாவளி மற்றும் புயல்களை ஆய்வுசெய்தவர். தனது அதிகாரபூர்வ பிளாக்கில்நவம்பர் மாதத்தில் சென்னையில் மட்டும் 1,218.6மில்லி மீட்டர் அதாவது, 121 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மழை அளவுகடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் நவம்பர் மாத மழைக் கணக்கீட்டில் உச்சபட்சம் என்கிறார். டிசம்பர் 1 - 2 ஆகிய நாட்களில் 24 மணி நேரத்தில் 345 மில்லி மீட்டர் அதாவது, 34 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு முன்னர் 1901 டிசம்பர் 10-ம் தேதி 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 261.1 மில்லி மீட்டர் அதாவது, 26 சென்டி மீட்டர் பெய்துள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் எல் நினோவின் தாக்கம் எப்போதும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ள ஜெப் மாஸ்டர்ஸ்இந்த முறை சென்னையில் பெய்த அதிகபட்ச மழைக்குக் காரணம் எல் நினோ மட்டுமல்ல... இண்டியன் நினோ’ எனப்படும் ‘Indian Ocean Dipole’ என்கிற இந்தியாவின் மேற்குக் கடல்பரப்பில் ஏற்படும் அதிக மற்றும் குறைந்த வெப்பத்தின் தள்ளாட்டம் என்றும் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே மழையின் அளவை மிகச் சரியாகக் கணிக்க முடியாத பெரிய சிக்கலுக்கு இந்திய வானிலை ஆய்வாளர்கள் ஆளாகி உள்ளதாகக் கூறுகிறார்.
சென்னையில் அரசு இயந்திரம் செயலற்ற நிலையில் இருந்தபோதுதன்னார்வலர்கள் களம் இறங்கியதைப்போல பெங்களூரில் வசிக்கும் அமெச்சூர் வானிலை ஆய்வாளர் ஷாஜு சாக்கோகளம் இறங்கி தீபாவளி முதலே தொடர்ச்சியாக செயற்கைக்​கோள் படங்களை ஆய்வுசெய்து ஃபேஸ்புக்கில் கணிப்புகளை எழுதத் தொடங்கினார். மழைப்பொழிவு பற்றிய அவரது கணிப்புகள் சரியாக இருந்தன. அவரைத் தொடர்புகொண்டபோது, ‘‘இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாஇந்தியப் பெருங்கடல்,அரபிக்கடல் என்ற இந்த வட்டத்துக்குள் நிலவும் நிகழ்வுகளை மட்டுமே வைத்து கணிக்கிறது. உலகளாவிய காற்று மற்றும் மேகங்களின் நகர்வுகளைக் கணக்கில் எடுக்காமல்ஒரு சிறிய வட்டத்துக்குள் தன் ஆய்வுகளை நிறுத்திக்கொள்கிறது’’ என்கிறார்.


எல் நினோ என்பது பசிபிக் கடலில் அல்லது ஆண்டுகளுக்கு ஒருமுறை கடல் நீரின் வெப்பம் டிகிரி முதல் டிகிரி வரை சூடாகும் நிகழ்வு. இந்த வெப்ப உயர்வுஇந்தப் பகுதியைக் கடந்துசெல்லும் காற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காற்றுவெப்பம் அல்லது ஈரப்பதம் என எதைச் சுமந்துகொண்டு வந்தாலும்இந்த எல் நினோ விளைவு அதை நிலைகுலைய வைத்துவிடும். இதனால்,இந்தியாவை நோக்கி வரும் காற்றின் தன்மை மாறிகோடை காலத்தில் கடும் வறட்சியை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் பரவலாகப் பெய்ய வேண்டிய மழை குறிப்பிட்ட ஒரே இடத்தில் பெய்துவிடும்.
1800-ம் ஆண்டில் இருந்து இதுவரை 18 எல் நினோக்களை இந்தியா சந்தித்து உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில்,அதிகபட்சமாக வறட்சியை மட்டுமே இந்தியாவில் உருவாக்கிய எல் நினோஇரண்டு மூன்று முறை மட்டுமே அதிகபட்ச மழையை அளித்துள்ளது. எல் நினோவின் பாதிப்பு இந்தியாவில் 2016-லும் தொடரும் என்கிறது சர்வதேச வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு. மொத்தத்தில் எல் நினோஇந்திய வானிலை ஆய்வாளர்களின் கணிப்பை இந்த முறை சென்னை வெள்ளத்தால் மூழ்கடித்து​விட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டோம். ‘‘இந்த முறை காற்று அழுத்தத் தாழ்வு நிலைகாற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் எனத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தது. எனினும் நாங்கள் தினசரி மழை பற்றிய தகவல்கள் கொடுத்துக்​கொண்டே இருந்தோம். அதே சமயம்இந்த ஊரில் இத்தனை சென்டி மீட்டர் மழை பொழியும் என்றெல்லாம் கணிக்க முடியாது. காரணம்மேகங்களின் நிலை மாறிக்கொண்டே இருக்கின்றன. எல் நினோவை பொறுத்தவரை இந்த மழைக்கு அதுவும் ஒரு காரணி என்று சொல்லலாம். எல் நினோவை நீண்டகாலத்துக்​கான மழையோவறட்சியோ பற்றிச் சொல்லத்தான்  பயன்படுத்துவார்கள். தினசரி பெய்கின்ற மழைக்கு அதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்’’ என்றார்.

கடல் ஆய்வாளர் ஒடிசா பாலு, ‘‘உண்மையில்வானிலையை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு முழுமையான வளர்ச்சியை நாம் அடையவில்லை. நமது பாரம்பர்ய கணிப்பு முறையில் ஒரு மாதத்துக்கு முன்னரே கணிக்க முடியும். மேலும்தற்போதைய வானிலை ஆய்வு மையம் அந்தமான் பகுதிகன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள பகுதிகள் சார்ந்த புள்ளி விவரங்களைத்​தான் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆனால்இந்தோ - பசிபிக் பரப்பு தொடர்பான வானிலை நிகழ்வுகள் பற்றிய வானிலை அறிக்கைகள் மண்டல அலுவலகங் களுக்கு உடனே வருவதில்லை. அவை வந்து சேரும்போதுவானிலையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.
உதாரணத்துக்குகாலை எட்டு மணிக்கு செயற்கைக்கோள் தொடர்பான படம் மற்றும் பிற தகவல்கள் வானிலை ஆய்வு மையத்துக்கு வருகிறது என்றால்அவை முழுவதுமாக ஆராயப்பட்டு மண்டல ஆய்வு மையத்தின் மூலம் வெளியிடும்போது குறைந்தது மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால்மேகத்தின் போக்குகாற்றின் வேகம் ஆகியவை சில நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறைகூட மாறும். மண்டல அலுவலகங்களையும் குறைகூற முடியாது. அனைத்து டேட்டாக்களும் ஒரே நேரத்தில் வந்தால் விரிவாகக் கணிக்க முடியும்’’என்றார்.
விஷ்வா

படம்: சு.குமரேசன்

நன்றி: ஜூனியர்விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக