புதன், டிசம்பர் 16, 2015

ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு..! தமிழகத்தை விட்டு வெளியேறும் தொழில்கள்...


சென்னையில் மழை வெள்ளம் வடிந்து​விட்டதுஇயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது’ என்று சொல்லிக்​கொண்டிருக்கிறது தமிழக அரசு. சாலைகளில் வாகனங்கள் ஓடுவதையும் வீதிகளில் மக்கள் நடமாடுவதையும் வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பி​விட்டது என்று படம் காண்பிக்கிறார்கள். ஆனால்கிடைத்த பாடம் வேறு.
விவசாயத்துக்கு அடுத்தபடியாகநம் நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் சிறுகுறுந்தொழில்கள் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயிருப்பதையும்அவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் நாதியற்று நடுத்தெருவில் நிற்பதையும் பார்த்தால்இயல்பு வாழ்க்கை இயலாமை வாழ்க்கையாகிவிட்டதை உணர முடியும்.

சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர்கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் சிறுகுறுந்தொழில்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எப்போதும் இயந்திரங்களின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும் அம்பத்தூர்அம்பத்தூர் சிட்கோஅத்திப்பட்டுஅயப்பாக்கம்காக்களூர்மறைமலை நகர்திருவொற்றியூர்மணலிவிருத்தாசலம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் தற்போது கனத்த அமைதி நிலவுகிறது. வேலை எதுவும் இல்லாததால்வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.
அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் மட்டும் 80 கோடி ரூபாய் அளவுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பொறுத்தரை, 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இந்துநாதன். தீபாவளி வரைக்கும் உற்பத்தி நடந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளமும்,போனஸும் கொடுத்தோம். உடனே மழை வந்துவிட்டது. பல தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்கள்,ஜெனரேட்டர்கள்உதிரிபாகங்கள் எல்லாம் சேதம் அடைந்துவிட்டன. சிறிய தொழிற்சாலைகளில் 4 இயந்திரங்கள் வரையிலும்,கொஞ்சம் பெரிய தொழிற்சாலைகளில் 15 இயந்திரங்கள் வரையிலும் உள்ளன. எல்லா இயந்திரங்களும் நாசமாகிவிட்டன. ஒரு இயந்திரத்தின் விலை 30 லட்சம் ரூபாய். இந்தப் பாதிப்புகள் முதல் மழைக்கு. அடுத்த மழை வந்தபோதுஒட்டுமொத்த தொழிற்பேட்டையும் தண்ணீரில் மூழ்கியது. என் கம்பெனிக்குள் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் நின்றது. எனக்கு 6 மோட்​டார்கள் பழுதானதுடன் ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும். பெரும் நஷ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் சூழலில்எப்படி எங்களால் சம்பளம் கொடுக்க முடியும். சம்பளம் கொடுக்கவில்லை என்றால்தொழிலாளர்கள் வேலைக்கு வரமாட்டார்கள்” என்று கவலையோடு சொன்னார் இந்துநாதன்.
தமிழ்நாட்டின் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கொண்டவை. இந்தத் தொழில்கள்தான்சுமார் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. சென்னைகடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 200 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் ஆப்பிரிக்காலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுஇந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் சதவிகிதம். இந்த நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து மருந்து உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டைஅடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கியது. ஈக்காடுதாங்கல்கிண்டி பகுதிகளில் உள்ள சிறுகுறுந்தொழிற்சாலைகளில் அடி உயரத்துக்குத் தண்ணீர் நின்றது. இங்கு தொழில் செய்யும் குறுந்தொழில் முனைவோரில் பெரும்பா லானவர்கள் கிட்டத்தட்ட அன்றாடம் காய்ச்சிகள். பத்துக்குப் பத்து அறையில் ஓர் இயந்திரத்தையும்ஒரு தொழிலாளியையும் வைத்துக்கொண்டு தொழில் செய்பவர்கள் நிறையப் பேர். கிடைக்கிற வருமானத்தில் தவணைக்கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டுகூலி கொடுத்துவிட்டு 500ரூபாயுடன் வீட்டுக்குச் செல்பவர்கள்தான் அதிகம். இவர்கள் தங்கள் தொழிலைப் பாதுகாக்க இன்சூரன்ஸ்கூட எடுப்பதில்லை. பெரும்பா லானோர் வாடகை இடத்தில்தான் தொழில் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் உள்ள தொழில் முனைவோர்களால்இந்தப் பாதிப்பில் இருந்து மீளவே முடியாது” என்கிறார் கிண்டி தொழிற்பேட்டையில் குறுந்தொழில் நடத்தி வருபவரும்தமிழ்நாடு சிறுகுறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சி.பாபு.
ஹுண்டாய்ரினால்ட்பி.எம்.டபிள்யூஃபோர்டு உள்ளிட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கிவரும் கார் உற்பத்தி தொழிற்சாலைகளும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இவர்கள் தங்கள் உற்பத்தியையே நிறுத்திவிட்டார்கள். திருவொற்றியூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு’ கம்பெனியில் 11,200 மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது,டிசம்பர் மாத விற்பனையை வெகுவாகப் பாதித்து உள்ளது.


இதுதொடர்பாகஅசோசம் அமைப்பின் தமிழக துணைத் தலைவர் டாக்டர் வினோத் சுரானாவிடம் கேட்டோம். அசோசம் கணக்குப்படி தமிழக வெள்ளத்தால் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலப் பாதிப்பு என்று பார்த்தால்அது 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் போகும். இந்த இழப்பைச் சரிக்கட்ட முதல் ஆண்டுகள் பிடிக்கும். ஐ.டி. துறை பெரிய அளவில் அடிவாங்கி இருக்கிறது.
கம்பெனிகள் தண்ணீரில் மூழ்கியதால்உடனடியாக 7,500 பேரை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றினார்கள். இனிமேல் சென்னைக்கு ஐ.டி. கம்பெனிகள் வருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. சென்னை உகந்த இடம் அல்ல என்று பலரும் நினைக்கிறார்கள். இதை​யெல்லாம் கணக்கில் எடுத்தால்இது மிகப் பெரிய பாதிப்பு. ஆட்டோ மொபைல் துறை பாதிக்கப்​பட்டுள்ளது. ஒரு கார் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால், 6 ஆயிரம் கோடி முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஆகிறது. இப்போது ஆட்டோமொபைல் துறை ஒட்டுமொத்தமாக அடிபட்டுவிட்டது. பல தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்களுக்குள் எல்லாம் தண்ணீர் போயிருக்கிறது.
பெரிய கம்பெனிகளுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆனால்சேதாரங்களை மதிப்பீடு செய்து இன்சூரன்ஸ் தொகை கிடைக்க6 முதல் 12 மாதங்கள் பிடிக்கும். கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் இருப்பதால்இந்தப் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். இங்கு ஆட்டோமொபைல் தொழில் நடத்துபவர்கள்தங்களது இரண்டாவது தொழிற்சாலையை வேறு மாநிலங்களில் ஆரம்பிப்பது தொடர்பாக யோசித்து வருகிறார்கள். மாநிலத்தின் தொழிற்கொள்கை முதலீட்டாளர்களுக்கு இணக்கமாக இல்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசிவருகிறார்கள். எனவேவேறு இடத்தைப் பார்க்கலாம் என்று அவர்கள் யோசித்துக்​கொண்டிருந்தார்கள். இந்த வேளையில்தான்வெளியே போவதற்கான முடிவை எடுப்பதற்கு வெள்ளம் ஒரு காரணமாக ஆகிவிட்டது. இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறார்கள்” என்கிறார்.
பெரிய கம்பெனிகளுக்கு பல மாதங்களுக்குப் பிறகாவது இன்சூரன்ஸ் கிடைக்கும். ஆனால் சிறுகுறுந்தொழில் முனைவோரைப் பொறுத்த அளவில்அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை. எனவேஇந்தப் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வது மிகவும் சிரமம்.
நிம்மதியாகச் சாப்பிட்டு ஒரு மாதம் ஆகிறது. தொழில் துறை அமைச்சர் மோகன் இரண்டு மூன்று தடவை இங்கு வந்தார். மத்திய அமைச்சர்கள் வந்தார்கள். தொழிற்​கூடங்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைப் பார்த்துவிட்டுமனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். அமைச்சர்கள் வந்து பார்வையிடு​வதாலோஆறுதல் சொல்வதாலோ எங்களுக்கு என்ன பிரயோஜனம்மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று அவர்கள் சொல்வதால் மட்டுமே எங்கள் பிரச்னை தீர்ந்துவிடுமா?இந்தப் பாதிப்பில் இருந்து நாங்கள் மீண்டு வரவேண்டும் என்றால்எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்கிறார் குறுந்தொழில் முனைவோர் ஒருவர்.
சிறுகுறுந்தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், 5 லட்சம் ரூபாய் வரை சுலபத் தவணையில் வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் வைத்துள்ளனர். அவற்றை நிறைவேற்றினால் மட்டுமேதமிழ்நாட்டில் சிறுகுறுநடுத்தரத் தொழில்கள் இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டிய தமிழக முதல்வர்அந்நிய முதலீடு ஒரு லட்சம் கோடியும்தமிழ்நாடு முதலீடு 10 ஆயிரம் கோடியும் வரும் என்று சொன்னார். சிறுகுறு தொழில்களை இந்தப் பாதிப்பில் இருந்து தூக்கி நிறுத்தவில்லை என்றால்ஒரு பைசா முதலீடுகூட தமிழ்நாட்டுக்கு வராது.

ஆ.பழனியப்பன்

படங்கள்: தி.ஹரிஹரன்

நன்றி: ஜூனியர்விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக