செவ்வாய், ஜனவரி 24, 2012

பாம்பு வாழும் புற்று அல்ல.. பாம்புக்கு வந்த புற்று...!


பாம்பு புற்று என்பதை பலரும் பார்த்திருப்போம். பாம்புக்கே புற்று வந்து பார்க்கமுடியுமா?

பாம்பு புற்று என்று பரவலாக கூறப்படும் புற்றுகள் உண்மையில் பாம்பால் உருவாக்கப்படுவதல்ல. கரையான்களால் உருவாக்கப்படும் புற்றுகளை இந்த பாம்புகள் விலையோ, வாடகையோ கொடுக்காமல் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை.


பாம்பு புற்று இருக்கட்டும். பாம்புக்கு புற்று வந்த கதையை பார்ப்போம்...

கோவை வ.உ.சிதம்பரனார் உயிரியல் பூங்காவில் உள்ள ஐந்து வயதான ஒரு நாகப்பாம்பின் உடலில் சில கட்டிகளை அங்குள்ள உதவியாளர்கள் பார்த்துள்ளனர். அந்தக் கட்டிகள் நாளுக்கு நாள் பெரிதாக வளர்வதோடு, பாம்பும் வழக்கமான உற்சாகத்தோடு இல்லாமல் சோம்பி இருப்பதையும் கண்டு, அந்த விலங்கு காப்பகத்தின் இயக்குனர் மருத்துவர் அசோகன் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஹலோ மிஸ்டர் நாகராஜன்! எப்படி இருக்கீங்க?

மருத்துவர் அசோகனின் ஆய்வில் அந்த நல்ல பாம்பிற்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அந்த பாம்பிற்கு சிகிச்சை அளிப்பது குறித்து வெளிநாடுகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள் உட்பட பல நண்பர்களை கலந்து ஆலோசித்த மருத்துவர் அசோகன், அந்த பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்.
இது கேன்சர்தான்... சந்தேகமே இல்லை...
மற்ற பணியாளர்களுடன் உதவியுடன் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப்பணியில் இறங்கியபோது வழக்கம்போல மின்சாரம் தடைபட்டது.

மின்சாரம் போயிடுச்சா.. சரி..சரி. அந்த பேட்டரி லைட்டை எடுப்பா


ஐயா! காமெராவை சரியா பிடிங்க. படம் முழுமையா வரணும்...
எனினும் கையிலிருந்த பேட்டரி விளக்கின் உதவியுடன் அறுவை சிகிச்சையை நடத்திய மருத்துவர் அசோகன், அந்த நல்ல பாம்பின் உடலில் இருந்த புற்றுநோய் பாதித்த தசைப்பகுதியை துண்டித்தார்.

இவ்வளவு பெரிய புற்றுக்கட்டி இருந்தா பாவம் மிஸ்டர் நாகராஜன் எப்படி தாங்குவார்..?
அப்பாடா.. ஒரு வழியா புற்றுக்கட்டியை நீக்கியாச்சு...
பின், அந்த நல்ல பாம்பின் உடலில் தையல் போடப்பட்டது.
நல்லா பிடிங்க சார்.. மிஸ்டர் நாகராஜன் சீக்கிரம் சரியாயிடுவார்..!
ஓகே. ஆபரேஷன் சக்ஸஸ்...!


ஒரு குழாய் மூலம் மருந்தும், உணவும் அளிக்கப்பட்டது.
மிஸ்டர் நாகராஜன் வாயைத்திறங்க.. மருந்து சாப்பிட சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கக்கூடாது...
மிஸ்டர் நாகராஜன்! இதுதான் உங்க உடம்பில் இருந்து எடுத்த புற்றுக்கட்டி.. நல்லா பார்த்துக்குங்க...
பிறகு தையல் போட்ட பகுதியில் கட்டுப்போட்டு சிறப்பு கவனிப்பு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
ஓகே. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. உடம்பு சீக்கிரம் சரியாகிவிடும்...

மருத்துவர் அசோகன் கால்நடை மருத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், சமூக சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர். மேலே இருக்கும் பாம்புக்கு சிகிச்சை அளித்ததைப் போலவே பல சவாலான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இது மரப்பூனை சார். மரத்திலிருந்து கீழே விழுந்துட்டாங்க அவ்வளவுதான்...


 மனிதர்களுக்கு புற்று நோய் வருவதற்கான காரணத்தை யாரும் இதுவரை திட்டவட்டமாக கண்டுபிடிக்கவில்லை. புகையிலை உபயோகித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் நிகழ்தகவு அடிப்படையிலேயே கூறப்படுகிறது. மாறிவரும் சமூகச்சூழலும், அதனால் ஏற்படும் சூழல் சீர்கேடுகளுமே புற்று நோய் போன்ற கேடுகளின் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இயற்கையிலிருந்து விலகி வரும் மனித இனத்திற்குத்தான் இத்தகைய கேடுகள் வருவதாக இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இயற்கையிலிருந்து விலகுவதற்கு வழியே இல்லாத பாம்புகளுக்கும் புற்றுநோய் போன்ற கேடுகள் ஏற்படுவது, நம்முடைய சூழல் எந்த அளவிற்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வற்கான ஒரு அளவுகோலாகவே தெரிகிறது.

3 கருத்துகள்:

கே. ஆர். அசோக் சொன்னது…

பாம்பு என்றவுடன் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து அடித்துக் கொல்லும் மனிதர்களிடையே, பாம்பிற்கு வந்த புற்று நோயை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர் அசோகனின் பணி பாராட்டிற்குரியது.

அதை புகைப்படங்கள் மூலம் பதிவு செய்த பூவுலகின் நண்பர்களும் பாராட்டுக்கு உரியவர்களே.

குறிப்பாக கடைசி பத்தியில் சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தை பதிவு செய்த தோழருக்கு சிறப்பு பாராட்டு.

Ramanathan சொன்னது…

Good Effort. Good Photos. Good Comments. :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இது விலங்கியல் பூங்காவில் வாழும் பாம்பானபடியால்; இதன் உணவு முறை இயற்கையாக இருப்பதற்கு வாய்ப்புக் குறைவு.
அதனால் இந்தப் புற்றுநோய் வந்திருக்குமோ?
ஆனாலும் இன்று நம் பூலோகம் உயிர்கள் வாழும் தகுதியை நாளும் இழக்கிறதென்பது உண்மையே!
வைத்தியருக்குப் பாராட்டுக்கள்.
படங்களும் தகவல்களும் அருமை!

கருத்துரையிடுக