வெள்ளி, டிசம்பர் 09, 2011

மனித உரிமை தினத்தில் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்

 ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் "அனைத்துலக மனித உரிமை பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டு 58 நாடுகள் அந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன. இதையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இந்த மனித உரிமைப் பிரகடனத்தின் 3வது அம்சம், "சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு" என்று கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத, ஆபத்து நிறைந்த அணுஉலைகளை அமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அனைத்து விதமான மோசடி மற்றும் அச்சுறுத்தல் வழிகளையும் மத்திய அரசு கையாள்கிறது. 

இந்நிலையில் தமிழ் மக்களின் மனித உரிமைகளை வலியுறுத்தும் விதத்தில், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் (சென்னை கூட்டமைப்பு) சார்பில் வருகிற டிசம்பர் 10ம் தேதி அன்று காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி பின்புறம் (ஸ்பென்சர் பிளாசா அருகே ) ஒரு நாள் அடையாள பட்டினிப் போராட்டம் நடைபெற உள்ளது. 



இதே நாளில் சேவ் தமிழ்ஸ் அமைப்பு சார்பாக மாலை 4.30 மணியளவில் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்க வளாகம் அருகே பேரணி ஒன்றும் நடைபெற உள்ளது.



 (படத்தை சொடுக்கினால் பெரிதாகும்)
சமூகம் குறித்த அக்கறையும், மனித உரிமைக் கோட்பாடுகளில் நம்பிக்கையும் கொண்ட அனைவரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கோருகிறோம். 
-பூவுலகின் நண்பர்கள்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவு நச்! அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

கருத்துரையிடுக