வியாழன், ஜனவரி 13, 2011

சிறந்த சிறு பத்திரிகை: பூவுலகு - விகடன் விருது 2010

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் "பூவுலகு" என்று சுற்றுச்சூழல் இதழ் நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியல், அரசியல், பொருளாதாரம், சட்டம், செய்திகள், செய்தி விமர்சனம், கவிதை, புகைப்படம் என பலதரப்பு அம்சங்களையும் "பூவுலகு" இதழ் வெளியிட்டு வருகிறது.

பூவுலகு இதழ் வழக்கமான சராசரியான வணிக இதழாக இல்லாமல், சூழல் சார்ந்த பார்வையில் வாசகர்களை செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எவ்வித பிரதிபலனும் பார்க்காமல் சூழலுக்காக போராடும் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் ஆகியோரின் பங்களிப்போடும், சமூக ஆர்வம் கொண்ட வாசகர்களின் ஆதரவோடும் பூவுலகு இதழ் நடத்தப்படுகிறது.

மேலும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சூழல் சார்ந்த நூல்கள் பதிப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த சமூகச் செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் பலதரப்பிலிருந்தும் "பூவுலகின் நண்பர்கள்" குழுவினருக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கப்படுகிறது.

தற்போது "பூவுலகு" இதழை 2010ம் ஆண்டின் சிறந்த சிற்றிதழாக விகடன் தேர்வு செய்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இந்த செயல்பாடுகளுக்கு சூழல் ஆர்வலர்களின் பங்களிப்பும், வாசகர்களின் ஆதரவுமே மூல காரணம். பூவுலகு இதழுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது அதன் படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்குமே உரித்தானது.

எனவே "பூவுலகு" இதழுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தை சுற்றுச்சூழல் படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.


பின் குறிப்பு: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை புத்தகத் திருவிழாவி்ல் அரங்கு (எண்: 75) அமைக்கப்பட்டுள்ளது. அரங்கில் பூவுலகு இதழையும், சூழல் சார்ந்த வெளியீடுகளையும் பெறலாம். சந்தாவும் செலுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக