கோல்கத்தா, ஜன. 13: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக கோல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
÷மத்திய அரசின் சார்பில் பங்கேற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஆவேசமாக பேசியதால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
÷தனது பேச்சில் குறுக்கிட்டுப் பேசி இடையூறு செய்தால் வெளியே தூக்கிப் போட்டுவிடுவேன் என்று விஞ்ஞானி சர்மாவை பார்த்து அமைச்சர் ரமேஷ் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பிரிவினர் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.
மரபணு மாற்றப்பட்ட கத்தரியைப் பற்றி÷அமைச்சர் ரமேஷ் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் அடிக்கடி குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மேடையிலிருந்து மைக்ரோ போனுடன் கீழிறங்கி வந்து, நான் பேசுவதை முதலில் கேளுங்கள். அதன் பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்றார். அடுத்த முறை நீங்கள் குறுக்கிட்டுப் பேசினால் வெளியே தூக்கி போட்டுவிடுவேன் என்று வாயில் கதவை நோக்கி கையை நீட்டியவாறு எச்சரித்தார். இதையடுத்து அமைச்சருக்கு எதிராக கோஷம் எழுந்தது. பின்னர் அமைச்சரின் பேச்சில் குறுக்கிட்ட சர்மாவும் பேச அனுமதிக்கபட்டார்.
÷கூட்டத்தில் பேசிய பலர் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்கு எதிராகப் பேசினர்.
÷மரபணு மாற்றப்பட்ட கத்தரியை நம் நாட்டில் அனுமதிப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் பெரிய நகரங்களில் நடைபெறுகிறது. அடுத்த கூட்டம் வரும் 16-ல் புவனேஸ்வரத்திலும் 19-ம் தேதி ஆமதாபாதிலும் 22-ம் தேதி ஹைதராபாதிலும் 23-ல்
பெங்களூரிலும் 27-ல் நாகபுரியிலும் 30-ல் சண்டீகரிலும் நடைபெறுகிறது.
÷தமிழகத்திலும் மரபணு மாற்றப்பட்ட கத்தரி காய்க்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதை விற்பனையை தடுக்க முடியாது என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேரவையில் கூறினார்.
நன்றி: தினமணி, 14-01-10
1 கருத்து:
Good Pictures. The pictures speaks the attitude of our Hon'ble Minister, even it is not taken now.
கருத்துரையிடுக