இந்த நிகழ்ச்சியில் சென்னை லயோலாக் கல்லூரி முதுநிலை ஊடகக்கலை (தமிழ்வழி) மாணவர்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். ஊடகக்கலை துறைத்தலைவர் திரு. அமல்ராஜ் மற்றும் விரிவுரையாளர் திரு அமைதி அரசு ஆகியோரின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கைவண்ணம் இதோ...
அது சரி நாடகத்தோட கதையை சொல்லுங்க...
... விவசாயிகள் விதை தெளிச்சு, நாத்து நடுறாங்க.
இருட்டு நேரத்தில் யாரோ ரெண்டு பேர் திருட்டுத்தனமா நுழையறாங்களே. யார் அது?
பன்னாட்டு வேளாண்மை நிறுவனங்கள்தான் ஆர்ப்பாட்டமா வர்றாங்க போலிருக்கு.
கவர்ச்சியான விளம்பரங்களும், அரசியல்வாதிகள் - அதிகாரிகளை விலைக்கு வாங்கும் தந்திரமும் உலகம் பூரா விவசாயிகளை ஏமாத்துறதுக்கு குறுக்குவழி.
அப்புறம்...
துள்ளிக்குதிக்கிற தவளைகளை...
அமுக்கிப்பிடித்து அதனோட மரபணுவை எடுத்து...
தக்காளிக்குள்ளே புகுத்தினால், தக்காளி கீழே விழுந்தால் நசுங்காது. தவளை தண்ணயிலே இருந்தாலும் அழுகிப்போகாம இருக்கிறது மாதிரி, தக்காளியும் அழுகாம இருக்கும். பார்க்கவும் பளபளன்னு இருக்கும்.
ஆஹா. அறிவியலோட சக்தியே சக்தி.
துள்ளிக்குதிக்கிற தவளைகளை...
அமுக்கிப்பிடித்து அதனோட மரபணுவை எடுத்து...
தக்காளிக்குள்ளே புகுத்தினால், தக்காளி கீழே விழுந்தால் நசுங்காது. தவளை தண்ணயிலே இருந்தாலும் அழுகிப்போகாம இருக்கிறது மாதிரி, தக்காளியும் அழுகாம இருக்கும். பார்க்கவும் பளபளன்னு இருக்கும்.
ஆஹா. அறிவியலோட சக்தியே சக்தி.
அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் அறிவியலை பயன்படுத்தி மக்களை பஞ்சத்திலே இருந்து மீட்டுடப்போகுது.
தக்காளியை தவளைத் தக்காளியா மாத்தினமாதிரி கத்தரிக்காயையும் கற்பழிச்சுடலாமா?
அட படுபாவிகளா. தக்காளியான என்னோட இயல்பையே மாற்றிப் போட்டீங்களே. பார்க்க பளபளன்னு இருந்தாலும் ருசி பழைய மாதிரி இல்லை. இயல்பான சத்துகள் இல்லை. அதைவிட முக்கியமான கேள்வி..
அட படுபாவிகளா. தக்காளியான என்னோட இயல்பையே மாற்றிப் போட்டீங்களே. பார்க்க பளபளன்னு இருந்தாலும் ருசி பழைய மாதிரி இல்லை. இயல்பான சத்துகள் இல்லை. அதைவிட முக்கியமான கேள்வி..
நான் சைவமா..? அசைவமா..?
அதெல்லாம் சரி. எங்களோட பூச்சி மருந்து, உரம், மரபணு மாற்றுவிதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யணும்னா அதற்கான விலையை தரணும் தெரியுமாடா? கடன்கார நாய்களே?
ஐயோ ஊருக்கே சாப்பாடு தயார் செய்கிற விவசாயிகளான நாங்களே கடனை சமாளிக்க முடியாம பசியும், பட்டினியுமா தவிக்க வேண்டிருக்கே.
வேறே வழியே இல்லை. அரசாங்கமும், விவசாய விஞ்ஞானிகளும் சொன்னதை கேட்டு கண்டதையும் போட்டு மண்ணை கெடுத்ததுக்கு எனக்கு இதுதான் சரியான தண்டனை.
அரசாங்கத்தை பொறுத்தவரை இதுவும் சாதாரண புள்ளிவிவரம்தான்.
ஹை ஜாலி. நாங்க வந்த வேலை முடிஞ்சது. இனி இந்தியர்கள் எதை சாப்பிடறாங்க. எப்படி சாப்பிடறாங்க என்பதை எல்லாம் நியூயார்க்-ல இருந்தே முடிவு பண்ணலாம். யார் செத்தா எங்களுக்கென்ன? யார் தாலியறுத்தா எங்களுக்கென்ன?
எங்களுக்கு தேவை லாபம்! கொள்ளை லாபம்!!
****
****
இந்த நிலையை மாற்றவே முடியாதா?
முடியும்!
நீங்கள் மனது வைத்தால்....
...என்ன செய்யலாம்?
நமது பாரம்பரிய அறிவை மீட்டெடுத்து, இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால் விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளையும் காப்பற்றலாம்.
எனவே
நாம் அனைவரும்
ஒன்று திரண்டு
1 கருத்து:
Good Post !! Informative!!
கருத்துரையிடுக