செவ்வாய், ஜனவரி 13, 2009

புத்தகத் திருவிழாவில் பொங்கல் விழா - புகைப்பட செய்தி

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் 11-1-09 அன்று சென்னை புத்தகத் திருவிழா வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. ராசேந்திரன், திரைப்பட இயக்குனர் பீ. லெனின், தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், பண்பாட்டு ஆய்வாளர் வெள் உவன், லயோலா கல்லூரி ஊடகக்கலை மாணவர்கள் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்விலிருந்து சில புகைப்படத் துளிகள்...

முதலில் வரவேற்பு


கரும்பால் வீடு கட்டுறாங்களோ?


பொங்கல் சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டாங்க! இப்ப கோலம் போட சொல்றாங்க!



இந்த கிழங்கையெல்லாம் பார்த்ததுகூட இல்லை...


என்னம்மா பொங்கல் தயாரா?



இதோ ஆச்சுங்க


இந்த பொங்கல் "தூயமல்லிச் சம்பா" என்னும் பழமையான அரிசியால் சமைச்சதாமே?


வெல்லம்கூட ரசாயனப்பொருட்கள் இல்லாத வெல்லமாம். இங்கே யாருக்கும் சர்க்கரை நோய் இல்லையே? சர்க்கரை நோய் இருந்தா இனி்ப்பு பொங்கல் சாப்பிட முடியாது.


பொங்கலோ பொங்கல்!


சென்னைக்கே இது புதுசு. நான் என் வெளிநாட்டு நண்பர்களுக்காக வீடியோ படம் எடுக்கறேன்.


சீக்கிரம் பொங்கல் குடுங்கப்பா


கலைநிகழ்ச்சி இருக்கிறதா சொன்னாங்களே


மீடியாக்காரங்க பறக்கறாய்ங்க சார்


இந்த பொங்கலோட சிறப்பு என்னன்னா...?


இந்த புத்தகத்தை படித்து தெரி்ஞ்சுக்கோங்க


ஹை... பொங்கல் தயாராயிடுச்சு!



எங்கப்பா "பிபிசி, அல் ஜஸீரா டிவி" எல்லாம் வரலையா?



சர்க்கரை பொங்கல் இனிக்குது. விவசாயிகளின், வியாபாரிகளின் வாழ்வு இனிக்கிறதா?



சிக்கலான கேள்விதான். யோசிச்சுதான் பதில் சொல்ல வேண்டும்.



மேடையில் ஏறினா கையை இப்படி ஆட்டணும், இன்னொரு பக்கம் நாற்காலியை தூக்கிடணும். என்ன சரிதானே!



என்ன பொங்கல் சாப்பிட்டாச்சா? கலை நிகழ்ச்சியை தொடங்கிடலாமா?


ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ..



என்ன செய்றாங்க? ஒன்னும் புரியலையே!



ம்ஹூம். சுத்தமா புரியலை. அடுத்த பதிவுல விவரமா இருக்குதாம். பார்த்துக்கலாம்.


ரசாயன உரங்கள் இல்லாத, பூச்சி மருந்து இல்லாத, மரபணு மாற்றம் இல்லாத பொங்கல் சாப்பிட அனைவரும் வருக!



அரசியல்வாதிங்கதான் நமக்கு அல்வா கொடுக்கறாங்க. இவங்க நல்ல சர்க்கரை பொங்கல் தராங்க. நல்லா இருங்கப்பா.


அமுதம்தான் கிடைக்கலை. பொங்கலாச்சும் சாப்பிடலாம்.


யாரங்கே. இன்னுமோர் பொங்கல் கொண்டுவா. தவறினால் சிரச்சேதம்தான்.


கிடைக்காத அமுதத்தைவிட கிடைத்த சர்க்கரை பொங்கலே மேல்.


செயற்கையான மரபணு மாற்றம் இல்லாத உலகம் படைக்க உறுதிமொழி


நன்றி. நன்றி. நன்றி


புத்தக கண்காட்சியையும் பார்க்கலாம். வாங்க.


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.


பி. கு.: கலை நிகழ்ச்சி தனிப்பதிவாக

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Good Show. Keep it up.

அகராதி சொன்னது…

வணக்கம். அந்த நிகழ்ச்சியை நானும் நேரில் பார்த்தேன். மிக நல்ல முறையில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது. அந்த வீடியோப்பதிவை யூடியூபில் போட்டு லிங்க் கொடுத்தால் நேரில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் பார்க்க உதவியாக இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

அருமையான நிகழ்ச்சி, எல்லா வருடமும் இப்படி சிறப்பான் நிகழ்ச்சிகளை அமைக்க என் வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக