பி.டி. கத்தரிக்காய் பிரச்சினையில் விவசாயிகள், நுகர்வோர் கருத்தை அறிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்.23-
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கும் பிரச்சினையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கருத்தை அறிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம் வருமாறு:-
கேள்வி:- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
பதில்:- பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்து; அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்; அந்தப் பிரச்சினையை ஆராய மத்திய அரசு குழு அமைப்பதாக அறிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கருத்தறிந்து, அதன் அடிப்படையில் முடிவெடுப்பதே உகந்ததாகும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி 23-10-09
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விரும்பும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு "பூவுலகின் நண்பர்கள்" நன்றி தெரிவிக்கிறது.
உணவுக்கொள்கைகள் மாநில அரசின் அதிகாரவரம்பின்கீழ் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளும், சத்திஷ்கர் போன்ற வேறு சில மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்துக்குள் மரபணு மாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன.
இத்தகைய ஒரு நிலையை தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று "பூவுலகின் நண்பர்கள்" கேட்டுக்கொள்கிறது.
7 கருத்துகள்:
ஒரு உணவுப் பொருளில் மரபணு மாற்று உணவுப் பொருள் இருக்கிறதா என்பதை குறிக்கும் முத்திரை இந்தியாவில் தேவையில்லை.அப்புறம் எப்படி பிரிப்பது. அப்படியே சோதனை மூலம் பிரித்து அறிய முடியும் என்றாலும் அதற்காக வசதிகள் பரவலாக இருக்கிறதா.மரபணு மாற்றப் பெற்ற கத்தரிக்காயும், மாற்றப்படாத கத்தரிக்காயும் ஒன்று போல் தோன்றும். வாங்குபவருக்கு வேறுபாடு தெரியாது.
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மரபணு மாற்றப் பெற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.அதனால் ஆபத்தோ, உடல் நலக்
கோளாறுகளோ ஏற்படவில்லையே.அப்படியிருக்கும்
போது நுகர்வோர் எதற்காக மரபணு மாற்றப்பெற்ற
உணவுப் பொருட்களை வேண்டாம் என்று சொல்ல
வேண்டும். உடல நலக்கோளாறு அல்லது ஆபத்து ஏற்ப்பட்டால் வாங்குவோரே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். இல்லாத பிரச்சினையை இருப்பதாக காட்டி பிரச்சாரம் செய்வது நியாயமா?.
நுகர்வோர் தீர்மானிக்க வேண்டும் என்றால் அதற்கு
முதலில் பி.டி கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுத்து,
அதை சந்தையில் விற்பனை செய்தபின்னர்தான்
தீர்மானிக்க முடியும்.அதை பயிரிடவே கூடாது என்றால் எப்படி தீர்மானிக்க முடியும்.
பெயரைச் சொல்லக்கூட துணிவில்லாத ந(ண்)பருக்கு,
//ஒரு உணவுப் பொருளில் மரபணு மாற்று உணவுப் பொருள் இருக்கிறதா என்பதை குறிக்கும் முத்திரை இந்தியாவில் தேவையில்லை.அப்புறம் எப்படி பிரிப்பது. அப்படியே சோதனை மூலம் பிரித்து அறிய முடியும் என்றாலும் அதற்காக வசதிகள் பரவலாக இருக்கிறதா.மரபணு மாற்றப் பெற்ற கத்தரிக்காயும், மாற்றப்படாத கத்தரிக்காயும் ஒன்று போல் தோன்றும். வாங்குபவருக்கு வேறுபாடு தெரியாது.//
இந்த நிலையில் மரபணுமாற்ற தொழில்நுட்பம் இந்தியாவுக்கு தேவையா?
//அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மரபணு மாற்றப் பெற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.அதனால் ஆபத்தோ, உடல் நலக்
கோளாறுகளோ ஏற்படவில்லையே.அப்படியிருக்கும்
போது நுகர்வோர் எதற்காக மரபணு மாற்றப்பெற்ற
உணவுப் பொருட்களை வேண்டாம் என்று சொல்ல
வேண்டும். உடல நலக்கோளாறு அல்லது ஆபத்து ஏற்ப்பட்டால் வாங்குவோரே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். இல்லாத பிரச்சினையை இருப்பதாக காட்டி பிரச்சாரம் செய்வது நியாயமா?.//
அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு எந்தக்கேடும் வரவில்லை என்பதை உறுதி செய்ய ஆய்வுகள் நடந்தனவா?
//நுகர்வோர் தீர்மானிக்க வேண்டும் என்றால் அதற்கு
முதலில் பி.டி கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுத்து,
அதை சந்தையில் விற்பனை செய்தபின்னர்தான்
தீர்மானிக்க முடியும்.அதை பயிரிடவே கூடாது என்றால் எப்படி தீர்மானிக்க முடியும்.//
பயிரிடவும், விற்பனை செய்யவும் அனுமதி கொடுத்தபின் அதில் தீமைகள் இருப்பது கண்டறியப்பட்டால் விளைநிலங்களில் இருக்கும் பயிர்களில் இருந்து மரபணுமாற்றக்கூறுகளை திரும்ப பெறமுடியுமா? அவ்வாறு திரும்பெற முடியாத ஒரு தொழில்நுட்பம் மிக அவசியமா?
போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கே இன்னும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத ஒரு உணவுப்பொருளை ஏற்க வலியுறுத்துபவர்களின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும்.
பெயரில்லா நண்பரே!! உங்கள் கருத்து தவறு! ஐரோப்பிய யூனியன் முழுக்க இதனை முற்றிலும் எதிர்த்துள்ளனர்!!
விவாதத்தை முன்வைத்த பெயரில்லா நண்பர், அவருக்கு பதில் கூறிய ஓட்டன் (பெயர் சரிதானா என்பதையும், பெயர்க்காரணத்தையும் தெரிந்து கொள்ள ஆவல்), தேவன் மாயம் ஆகியோருக்கு நன்றி.
உணவுக்கொள்கைகள் மாநில அரசின் அதிகாரவரம்பின்கீழ் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளும், சத்திஷ்கர் போன்ற வேறு சில மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்துக்குள் மரபணு மாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன.//
நல்ல கோரிக்கைங்க...
தமிழினம் மட்டும் என்ன சோதனை எலிகளா???
மக்களிடம் போதிய விழிப்புணர்ச்சி ஏற்படுமா???
நம் ஊரிலேயே நல்ல பயிர்கள் இருக்கும் போது எதற்காக வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டும். அதுவும் சந்தேகத்திற்கிடமான பயிரை?
நல்ல பதிவு. எனது கருத்து இங்கே
http://paadiniyar.blogspot.com/2009/10/blog-post_23.html
வேண்டாம் என்று நிராகரிக்கும் முன் விவசாயிகளிடம் பயிர் செய்து பார்க்க அனுமதியுங்கள், நுகர்வோர் அந்தக் கத்தரிக்காய்களை பயன்படுத்த அனுமதியுங்கள். அவர்கள் முடிவு செய்யட்டும்.
"அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு எந்தக்கேடும் வரவில்லை என்பதை உறுதி செய்ய ஆய்வுகள் நடந்தனவா?"
There has been no evidence of harmful side effects on account of GM foods.Do you think that millions of consumers in USA, Canada and other countries are fools or idiots to accept this and suffere if there is any problem.
WHO has not banned GM food as a health hazard,
nor FAO has.
"பயிரிடவும், விற்பனை செய்யவும் அனுமதி கொடுத்தபின் அதில் தீமைகள் இருப்பது கண்டறியப்பட்டால் விளைநிலங்களில் இருக்கும் பயிர்களில் இருந்து மரபணுமாற்றக்கூறுகளை திரும்ப பெறமுடியுமா? அவ்வாறு திரும்பெற முடியாத ஒரு தொழில்நுட்பம் மிக அவசியமா?"
If there is any such problem its further use can be banned.The produce can be destroyed. But if there are no adverese effects let them be cultivated in the next season also.
ஐரோப்பிய யூனியன் முழுக்க இதனை முற்றிலும் எதிர்த்துள்ளனர்!!
Yes because they do not need any technology to increase productivity in agriculture.They are suffering from surplus production.
உணவுக்கொள்கைகள் மாநில அரசின் அதிகாரவரம்பின்கீழ் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநில அரசுகளும், சத்திஷ்கர் போன்ற வேறு சில மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்துக்குள் மரபணு மாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளன
Great, do they have testing facilities.This is just humbug. They cannot prevent farmers from planting GM crops when they are approved by the Central Govt. If you dont know this, it shows your ignorance. In fact farmers need no permission from anyone ,once the GM crop is approved, to cultivate and sell it.
Bunch of fools and scare mongers in Tamil blog world can write any nonsense. Dont expect all to accept such nonsense.
கருத்துரையிடுக