ஞாயிறு, மே 03, 2009

"பூவுலகு" இதழ் - மீண்டும் வருகிறது

"பூவுலகு" இதழ் தனிச்சுற்று இதழாக மீண்டும் வரவிருக்கிறது.

ஜூன் 6ம் தேதி இதழை வெளிக்கொணர்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

இருமாதங்களுக்கு ஒரு இதழாக கொணர திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், இயற்கை மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், கதை, கவிதை,
பேட்டி போன்ற அம்சங்களுடன் இதழ் வெளிவர இருக்கிறது.

இந்த இதழில் மேலும் என்ன இருக்க வேண்டும் என்பது குறித்த நண்பர்களின்
கருத்துகள் மற்றும் படைப்புகள் வரவேற்க படுகின்றன.

கருத்துகளை இங்கே பதியும்படி கேட்டுக்கொள்கிறோம்.

படைப்புகளை info@poovulagu.org என்ற முகவரிக்கு யுனிகோட் எழுத்துருவில்
தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும் நன்றி.

அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவும்:

பூவுலகின் நண்பர்கள்
மே/பா ஆரோக்கியா சித்த மருத்துவமனை
A2, அலங்கார் பிளாசா
425, கீழ்பாக்கம் கார்டன்
கீழ்பாக்கம்
சென்னை - 600 010.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிகவும் நல்ல செய்தி.

நண்பர்கள் நெடுஞ்செழியன், புருஷோத்தமன், குமாரசாமி, பிரிதிவிராஜ், அசுரன், பாமரன் உள்ளிட்டோரின் முயற்சியால் உருவான பூவுலகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சி.

ஆனால் இதழ் கொண்டுவருவது என்பது சாதாரண விடயமில்லை. கடந்தமுறை இதழ் வந்தபோது பெரும் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

அவற்றை களைந்துவிட்டு, சரியான திட்டமிடலுடன் இதழை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை விழி்ப்புணர்வுப்பணியில் மட்டுமே ஈடுபடும் அறிவுஜீவிகளுக்கான அமைப்பாக மட்டுமே நடத்தாமல், தேவைப்படும்போது களப்பணிகளிலும் ஈடுபடும் அமைப்பாக உருவாக்கினால், அந்த அனுபவங்களும் சிறந்த படைப்பாக அமையும்.

அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் தனிநபர்களையும், அமைப்புகளையும் அம்பலப்படுத்தவும் முன்வரவேண்டும்.

-கானக்குயிலன்

கருத்துரையிடுக