புதன், டிசம்பர் 07, 2011

அணு உலைக்கு எதிராக அதிரடி நோட்டீஸ்!

100 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது... கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டைத்தை மழுங்கடிக்க அணு உலைக்கு ஆதரவாகவும் போராட்டங்கள்...பிரஸ்மீட்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
"அணு உலை பாதுகாப்பானதுதான்.  ஏற்கனவே... அணு உலை இயங்கிவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சுற்றியுள்ள மக்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்.அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை" என்று அணுசக்தித்துறை விஞ்ஞானிகள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், அஸ்பியர்(ASPIRE) தொண்டு நிறுவனத்தின் டாக்டர்.மஞ்சுளா தத்தா, மத்திய ஆய்வுக்குழுவினர், அடையார் புற்றுநோய் மைத்தின் இயக்குனர் டாக்டர். சாந்தா போன்றவர்கள் சொல்லிவரும் நிலையில்...


இவர்களின் அறிக்கைக்கு சூழல்பாதுகாப்பிற்கான மருத்துவர்க்குழு (DOSE) பல்வேறு கேள்விகளை முன்வைத்து நோட்டீஸை விநியோகித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் அப்படியே ஸ்கேன் செய்து உங்கள் முன் வைக்கப்படுகிறது.











இந்த நோட்டீஸ் குறித்து அணு உலை ஆபத்துகுறித்து ஆய்வு செய்துவரும் சமூக ஆர்வலர் மருத்துவர். வீ.புகழேந்தி நம்மிடம், "அணு உலையால் ஆபத்து வராது என்று சொல்பவர்கள் அணு உலை இயங்கிவரும் கல்பாக்கம் பகுதிக்கு வந்து அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதை நேரில் பார்த்தால் இதையமுள்ளவர் எவரும் அணு உலையால் ஆபத்தில்லை என்று சொல்லமாட்டார்கள். கல்பாக்கம் பகுதியில் அணு உலையின் ரேடியேஷனால் பலவித புற்றுநோய்கள், மூளைவளர்ச்சி குறைபாடு, குழந்தையின்மை, பிறவி ஊனம், கட்டிகள் என பாதிப்பதோடு விவசாயமும் மீன்பிடித்தொழிலையும் இழந்துகொண்டிருக்கிறார்கள் கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள்.  இதைவைத்தே DOSE அமைப்பு மூலம் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம்.

இதனால், கொதித்தெழுந்த அணுமின் நிலையநிர்வாகம் கூடங்குளத்தைபோல கல்பாக்கத்திலும் மக்கள் போராட்டம் வெடித்துவிடக்கூடாது என்பதற்காக பலவழிகளில் என்னை மிறட்டிவருகிறார்கள். பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்றும் மறைமுகமாக மிறட்டி வருகிறார்கள். கல்பாக்கம் அணு உலையால் ஆபத்து உண்டானால் கல்பாக்கம் பகுதி மட்டுமல்ல... சென்னை, பாண்டிச்சேரி என முக்கிய பகுதியில் வாழும் மக்களுக்கும் ஆபத்துதான். மக்களின் நலனுக்காக எதையும் சந்திக்கத்தயார்" என்கிறார் அதிரடியாக.

-ம.மனோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக