வெள்ளி, டிசம்பர் 25, 2015

பேரிடரைத் தடுக்காமல் பேரழிவு ஆக்கிவிட்டோம்!

ழை முடிந்தபிறகும் மழையைப் பற்றியே பேசியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கிவிட்டது மழை!
‘தமிழகத்தில் வெள்ளம்’ என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் கடந்த 15-ம் தேதியன்று சென்னை அடையாறில் உள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
முதலில் பேசிய, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன், “மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டு அதை அறிக்கையாக அரசிடம் அளிக்கப்போகிறோம்” என்று குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பேசினர்.
“பேரிடரைத் தடுக்க முடியும்!”
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும், நீர்வள நிபுணருமான எஸ்.ஜனகராஜன்: “சமீபத்திய மழை வெள்ளத்தால் ஏழை, நடுத்தர, உயர் வர்க்கத்தினர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்​பட்டனர். உரிய நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், அதைப் பேரிடர் என்று சொல்ல முடியாது. முதலில், இந்த மழையால் என்னென்ன ‘ரிஸ்க்’ இருக்கும் என்பது பற்றிய புரிதல் இருந்ததா? எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்கிற ஆய்வு இருந்ததா? சிக்கலான சூழலைச் சமாளிக்கக்கூடிய உத்திகள் நம்மிடம் இருக்கிறதா? இதெல்லாம் இருந்தால்தான், இவ்வளவு மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொள்ள முடியும். பேரிடர் என்பது தடுக்கப்படக்கூடிய ஒன்று. அது எவ்வளவு பெரிய பேரிடராக இருந்தாலும் சரி. தென் அமெரிக்கா சந்தித்த பேரிடருடன் ஒப்பிடுகையில், இங்கு நாம் பார்த்த பேரிடர் ஒன்றுமே கிடையாது. தடுப்பதற்கான முயற்சி எதுவும் எடுக்காமல், ரிஸ்க் மேனேஜ்மென்ட் எதுவும் செய்யாமல் இருந்தால், கண்டிப்பாக அது பேரழிவாகத்தான் இருக்கும்.
 இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் 4-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. ஐ.டி. காரிடர் பற்றிய பெருமிதம் நமக்கு இருக்கிறது. ஐ.டி. ஏற்றுமதியில் இந்திய அளவில் 2-வது, 3-வது இடத்தில் சென்னை உள்ளது. என்ன கொடுமை என்றால், ஒட்டுமொத்த ஐ.டி. காரிடரும் இந்த வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இயற்கையிலேயே மிக அழகான அமைப்பில் உருவான வடிகால் அமைப்பு சென்னையில் உள்ளது. வட சென்னையில் கொசஸ்தலை ஆறு. மத்திய சென்னையில் கூவம் ஆறு. தென் சென்னையில் அடையாறு ஆறு என மூன்று ஆறுகள் உள்ளன. ஆந்திராவில் இருந்து பிச்சாவரம் வரை 480 கி.மீ. நீளத்துக்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளது. மாம்பலம் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உட்பட 13 கால்வாய்கள் உள்ளன. அதுதவிர, வேளச்சேரி பள்ளிக்கரனை சதுப்பு நிலப்பகுதி உள்ளது. இவ்வளவு இருந்தும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த அமைப்புகள் அத்தனையும் ஆக்கிர​மிக்கப்பட்டு உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 3,600 சிறிய, நடுத்தர, பெரிய நீர்நிலைகள் உள்ளன. அவை, 40 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டவை. அந்தத் தண்ணீர் சென்னை நகருடைய மூன்று ஆண்டு தேவைக்குப் போதுமானது.” 
“விரயமாகும் நீர்வளம்!”
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் எல்.வெங்கடாசலம்: “சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றிய அடிப்படையான விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். பன்முக சூழல் அமைப்பை தண்ணீர் உருவாக்குகிறது. உணவு​ப் பொருட்களை உற்பத்தி செய்யவும், உணவு தயாரிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. இயற்கை அளிக்கும் அரிய மூலதனமான தண்ணீரை நாம் வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 41 ஆயிரம் நீர்ப்பாசன அமைப்புகள் இருந்தன. தற்போது 19 ஆயிரம் தான் உள்ளன. இவற்றிலும், பல செயலிழந்து போயுள்ளன.
இந்தப் பருவமழையின்போது, 327 டி.எம்.சி தண்ணீர் கடலுக்குப் போயுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிற இதே அரசுதான், பல மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கடலுக்குள் விடுகிறது. அபரிமிதமான தண்ணீரைக் கடலுக்குள் விட்டுவிட்டு, நெம்​மேலியில் கடல்நீரைக் குடிநீராக மாற்றிக்​கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் பெறுவதால், அது பல சமூகப் பிரச்னை​களை ஏற்படுத்துகிறது.
சென்னைக்குத் தண்ணீர் கொடுப்பதால், அங்குள்ள விவசாயிகளால் வேளாண்மை செய்ய முடியவில்லை. அங்கு, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. ஒரு பக்கம் உபரிநீர், இன்னொரு புறம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை. இதுபற்றி உடனடியாக நாம் சிந்திக்க வேண்டும்.”
“ஆறுகளுக்கு மறுவாழ்வு தேவை!”
சூழலியல் பொறியாளர் ஜெய்சங்கர்: “கூகுள் எர்த் வரைபடத்தில் பாத்தால், செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே வடிகால் பாதையின் அகலம் 800 அடியாக இருக்கிறது. இது, ஈக்காடுதாங்கலில் 123 அடியாகச் சுருங்கி, அடையாறு அருகே 300 அடியாக விரிகிறது. ஆக்கிரமிப்பு என்பது நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்​கிறது. சென்னையில் 6 ஆயிரம் கி.மீ. அளவுக்கு சாலைகளும், வீதிகளும் உள்ளன. ஆனால், 1,600 கி.மீ-க்குத்தான் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. அதைப் பராமரிப்பதும் எளிதான காரியம் இல்லை. சமீபத்தில் வெள்ளம் வந்தபோது, சென்னை குடிநீர்வாரியத்தின் கழிவுநீர் கால்வாய்கள்தான் உதவி செய்தன. வளர்ச்சித்திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குடிசைப்​பகுதிகளில் துப்புரவுத்​தொழிலாளர்களும், குடிநீர் வடிகால் தொழிலாளர்களும்தான் இருக்கிறார்்கள். வெள்ளம் வந்தால் அவர்கள்தான் முதலில் பாதிக்கப்​படுகிறார்கள். மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க நினைப்பதைப்போலவே, நம் ஆறுகளுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும்.”
“இயற்கையை அவமதிக்கிறீர்கள்!”
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம்: “அரிதிலும் அரிதான இயற்கைப் பேரழிவு என்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருக்​கிறார். இது ஒன்றும் அரிதானது நிகழ்வு அல்ல. வழக்கமான பருவமழைக் காலத்தில் பெய்த மழை இது. இது ஒன்றும் கூடுதல் மழை என்றும் சொல்ல முடியாது. ஏற்கெனவே இதைவிட அதிகமான அளவுக்கு இங்கு மழை பெய்துள்ளது. அபரிமிதமான தண்ணீரை இயற்கை கொடுக்கிறது. ஆனால் அதை, இயற்கைப் பேரழிவு என்று சொல்கிறீர்கள். இது முழுக்க முழுக்க மனிதத் தவறு.
சென்னையில் ஏன் இந்த பாதிப்பு ஏற்பட்டது? தாழ்வான பகுதிகளில் கட்டடங்​கள் கட்டக் கூடாது, நீர்நிலைகளில் கட்டங்கள் கட்டக் கூடாது என்று 2-வது மாஸ்டர் பிளானில் தெளிவாகச் சொல்லப்பட்டது. ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும் அந்தப் பிளானில் வகுக்கப்பட்டன. அவை எல்லாமே ஆவணங்களில் உள்ளன. ஆனால், அந்த விதிமுறைகளில் ஒன்றுகூட பின்பற்றப்படவில்லை. விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, ஊழலும் பேராசையும் அனைத்து இடங்களிலும் ஆக்கிரமித்தன. அறிக்கைகள், திட்டங்கள், உக்திகள், நிபுணர்களின் ஆய்வுகள் என எல்லாம் தூக்கியெறியப்பட்டன. ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் ஸ்டாண்ட் என்று சொல்லப்படும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், வேளச்சேரியில் மிகப் பெரிய மால், நுங்கம்பாக்கத்தில் சர்வதேசத் தரத்தில் டென்னிஸ் ஸ்டேடியம் என ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம்.
குளம், குட்டை, ஏரி என பள்ளமான இடங்களுக்குத் தண்ணீர் செல்லும். நீர் வழிகள் வழியாகவும் செல்லும். இதுதான் இயற்கை. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் இந்த நீர் வழிகள் வழியாக, நீர்நிலைகள் மூலம் தண்ணீர் வடிந்துவிடும். ஆனால், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? புயல் கிடையாது. இடி கிடையாது. வழக்கமான மழைப் பொழிவு இது. எனவே, அரிதிலும் அரிதான இயற்கைப் பேரழிவு என்று தலைமைச் செயலாளர் சொல்வதை நான் மறுக்கிறேன். இப்படிச் சொல்வதன் மூலமாக, இயற்கையை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.”
“இருவிதமான ஆக்கிரமிப்புகள்!”
சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்: “ஆக்கிரமிப்பு இரண்டு விதங்களாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று சட்ட ரீதியான ஆக்கிரமிப்பு. இன்னொன்று, இயற்கை ரீதியான ஆக்கிரமிப்பு. ஏரிக்குள் வீட்டைக் கட்டி, அதற்கு பட்டா கொடுத்து, சி.எம்.டி.ஏ அனுமதியும் கொடுத்துவிட்டால், சட்டரீதியாக அது ஆக்கிரமிப்பு இல்லை. ஆனால், நீரின் கண்ணோட்டத்தில் அது ஆக்கிரமிப்புதான். ஏழைகளின் ஆக்கிரமிப்பை சட்ட ரீதியான ஆக்கிரமிப்பு என்று அரசும், நீதிமன்றங்களும் பார்க்கின்றன. எனவே, ஏழைகளின் ஆக்கிரமிப்புகளை மட்டும்தான் அகற்றுவார்கள். பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளில் கைவைக்க மாட்டார்கள்.”  
- இந்த விவாதங்கள் நாடு முழுக்கத் தொடர்ந்து நடக்கட்டும்!
- ஆ.பழனியப்பன்
நன்றி: ஜூனியர் விகடன்

வியாழன், டிசம்பர் 17, 2015

மழையிடம் என்ன கற்றுக் கொண்டோம்? -பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்

விடாது மழை பெய்துகொண்டிருந்த அந்த டிசம்பர் 1-ம் தேதி இரவில், சென்னையில் பெரும்பாலானவர்கள் `சற்றே அதிகமாகப் பெய்யும் சாதாரண மழை' என்றுதான் நினைத்திருப்பார்கள். அடுத்த நாள் தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் வெள்ளத்துக்கு அது முன்னோட்டம் என்பதை, பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். அப்படி உணராதவர்களில் ஈக்காட்டுத்தாங்கல் டிஃபென்ஸ் காலனியில் வாழ்ந்த தம்பதியும் அடக்கம்.
72 வயது கர்னல் வெங்கடேசனும் அவரது மனைவி கீதாவும் அப்படித்தான் நினைத்தார்கள். வெள்ளம் வரத் தொடங்கியபோது சாதாரணமாகவே அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதன் அபாயத்தை உணர்ந்தபோது அவர்களால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடிய வில்லை. வீட்டைவிட்டு வெளியே வந்தால்தான் மாடிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில், அதற்குப் பயந்து வீட்டுக்கு உள்ளிருந்தே அபயக்குரல் எழுப்பியபடி டைனிங் டேபிள், பின்னர் அதற்கு மேல் சேர் என ஏறி நின்று கொண்டிருந்தவர்களை, 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வெள்ளம் காவுகொண்டது. எல்லைப் போராட்டத்தில் மீண்ட உயிர், சென்னையின் வெள்ளப் போராட்டத்தில் பலியானது.


பள்ளிக்கரணையில் இருந்து சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றுக்காகக் கிளம்பிய தம்பதி, விமானம் ரத்து ஆனதால் வீடு திரும்ப, அவர்கள் வீட்டுக்குச் சேரும் முன்னரே வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. மழைக்குப் பயந்து பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளத்தில் மிதந்த ஒரு பிணத்தையாவது நடுக்கத்துடன் பார்த்தபடிதான் கடந்தார்கள். இப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், மழைநீரோடு மக்கள் கண்ணீரும் சேர்ந்து உருவானதுதான் டிசம்பர் 2-ம் தேதியின் பெரு வெள்ளம்.
இது கையாள முடியாத பெருமழையா?
`அளவுக்கு அதிகமான மழை வரும்' என வானிலை ஆய்வு மையம் சொன்னாலும், `50 செ.மீ மழை பெய்யும்' எனக் கணக்கிட்டுச் சொல்லவில்லை' எனக் குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர். ஆனால், நவம்பர் 30-ம் தேதியே சென்னையிலும் சுற்றுப்புறத்திலும் 50செ.மீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கிறது பி.பி.சி வானிலை அறிக்கை.
சென்னையின் நீர் ஆதாரங்களான பெரும்பாலான ஏரிகள், தீபாவளிக்கு முன்னர் வரை கிட்டத்தட்ட காலியாக இருந்தன. ஆனால், நவம்பர் இறுதியில் அவை கிட்டத்தட்ட முழுமையான கொள்ளளவை அடைந்தன.  இந்த நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் 22 அடிக்கு இருந்தது. ஏரியின் கொள்ளளவே 24 அடிதான். அந்தச் சமயத்தில் ஏரியில் இருந்து அடையாறுக்கு வெளியேற்றப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு 900 கன அடி என்கிறது அதிகாரபூர்வத் தகவல். பிறகு, டிசம்பர் 1-ம் தேதி கனமழை தொடங்கியபோது செம்பரம்பாக்கம் ஏரி 3,396 மில்லியன் கன அடியை அடைந்தது. ஏரி உடைந்துவிடும் என்ற அச்சத்தில், பொறியாளர்கள் அன்றிரவு 10மணிக்கு விநாடிக்கு 29,000 கன அடி நீரைத் திறந்தார்கள். ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வந்த அறிவிப்பில் விநாடிக்கு7,500 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
அரசின் ஒவ்வோர் அறிவிப்பிலும் ஓர் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், `செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதில் எந்த நிர்வாகக் குழப்பமும் இல்லை'என்கிறார் தலைமைச் செயலாளர். ஆனால் மின் துறை காவல் துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு தகவல் தரப்படவில்லை. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகூட தரப்படவில்லை. 
 ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள்...
சென்னையில் இருந்த 40-க்கும் அதிகமான ஏரிகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்ததன் விளைவுதான் இந்த வெள்ளம். சென்னையில் நீங்கள் எந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எடுத்துக்கொண்டாலும், அதன் பிரமாண்டத்துக்குப் பின்னால் ஒரு நீர்நிலையின் மரணம் இருக்கும்.
சோழிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனை, மிகப் பெரிய சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது. சென்னையின் மிகப் பெரிய மால்களில் ஒன்றான ஃபீனிக்ஸ் மால், வேளச்சேரி ஏரியில் அமைந்துள்ளது. எம்.ஆர்.டி.எஸ் பறக்கும் ரயில், பக்கிங்காம்  கால்வாயைப் பாதி அடைத்துக்கொண்டு ஓடுகிறது. மதுரவாயல் முதல் சென்னை  துறைமுகம் வரை திட்டமிடப்பட்டிருக்கும் பறக்கும் சாலை கூவம் ஆற்றுக்குள் செல்ல இருக்கிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், ஐ.டி பார்க்குகள் பலவும் ஏரிகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளன. அவ்வளவு ஏன்? `நீரின்றி அமையாது உலகு' என பாடிய வள்ளுவனுக்கே, ஏரியை அழித்துத்தான் வள்ளுவர்கோட்டம் கட்டியிருக்கிறோம். 


சென்னைக்குள் பாய்ந்த வெள்ள நீர் என்பது, சென்னையில் மட்டும் பொழிந்த மழையால் வந்தது அல்ல. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் வெள்ள நீர் இது. அழித்த நீர்நிலைகள்போக இன்னும் 3,600 நீர்நிலைகள் இந்த மூன்று மாவட்டங்களில் இருப்பதாகச் சொல்கிறார், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஜனகராஜன். அவற்றைத் தூர்வாரி ஒழுங்காக முழுக் கொள்ளளவைப் பராமரித்தால் 30 டி.எம்.சி தண்ணீர் நமக்குக் கிடைக்கும். இதே செம்பரம்பாக்கம் ஏரியை நாம் முறையாகத் தூர்வாரிப் பராமரித்திருந்தால், அங்கே இருந்து நீரைத் திறந்துவிடும் தேவையே ஏற்பட்டு இருக்காது.
சுருங்கிவிட்ட வடிகால்கள்...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 29,000 கன அடி நீர் திறந்துவிட்டதாகத்தான் அரசு சொல்கிறது. இது   உண்மையான எண்ணிக்கையா, திறந்துவிடப்பட்டது இதைவிட அதிகமா என்ற சந்தேகங்களை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால் நிச்சயம் விநாடிக்கு 29,000 கன அடி நீரைத் தாங்கும் திறன் அடையாறுக்கு உண்டு. 2005-ம் ஆண்டு இதே அடையாற்றில் விநாடிக்கு 55,000கன அடி நீர் சென்றுள்ளது. அடையாறு மலர் மருத்துவமனை அருகே  250 மீட்டராக இருக்கும் அடையாறு ஆற்றின் அகலம், சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகில் வெறும் 50மீட்டராக இருக்கிறது. இதைப்போலதான் கொசஸ்தலை ஆறும். அதன் கொள்ளளவு 1,25,000கன அடி. இப்போது வந்ததோ 90,000 கன அடி மட்டுமே. அதன் அகலம் 50 மீட்டர் சுருங்கியதன் விளைவு 25,000 கன அடி நீர் வெள்ளமாக மாறி திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியது. கூவம் ஆற்றின் கொள்ளவு 21,000 கன அடி. இப்போது அதில் சென்றது வெறும் 13,000 கன அடி மட்டுமே. பிறகு ஏன் எம்.எம்.டி.ஏ காலனியும் அரும்பாக்கம் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின? ஏனென்றால் கூவம் ஆற்றில் 60 சதவிகிதம் சேறு உள்ளதாக பொதுப்பணித் துறை அறிக்கை சொல்கிறது.
கொசஸ்தலை ஆறு கடலில் சென்று கலக்கும் எண்ணூர் கழிமுகம் 120 மீட்டர் அகலம் கொண்டது. கூவம் கடலில் கலக்கும் நேப்பியர் பாலத்தின் அருகில் அது 150 மீட்டர் அகலம் கொண்டது. அடையாறு கடலில் சென்று கலக்கும் பட்டினம்பாக்கத்தில் அடையாற்றின் அகலம் 300 மீட்டர். இதில் எண்ணூரிலும், நேப்பியர் பாலத்தின் அருகிலும் துறைமுகங்களில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் மண் சேர்ந்து, ஆற்றின் ஆழத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் ஆற்றுநீர், வேகத்துடன் கடலில் சென்று கலக்க  முடியவில்லை. இந்த இரண்டு ஆறுகளின் முகத்துவாரத்தைத் தொடர்ந்து தூர்வாரி வைத்திருந்தாலே பிரச்னை பாதியாகக் குறைந்து இருக்கும்!


சென்னையின் முக்கிய இணைப்பு இடங்களான விமான நிலையத்திலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இரண்டுமே வடிநீர் கால்வாயின் மீது கட்டப்பட்டவை. 

சென்னையின் இரண்டாவது மாஸ்டர் பிளானில் நீர்நிலைகள் பற்றியோ, வடிகால் முறைகள் பற்றியோ ஒரு தகவலும் இல்லை. வழக்கமாக மாஸ்டர் பிளானில் வெள்ள நீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவற்றின் வரைபடம் இருக்கும். ஆனால், சென்னையுடன் புதிதாகச் சேர்க்கப்பட்ட சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கான கழிவுநீர் வடிகால் வரைபடமே அதில் இல்லை. இந்த அடிப்படை விஷயம்கூட இல்லாத மாஸ்டர் பிளானை வைத்துக்கொண்டு, எப்படி உங்களால் ஒரு பெரிய நகரத்தைப் பராமரிக்க முடியும்? சென்னையில் எஞ்சியுள்ள சுமார் 150 நீர்நிலைகளைப் பாதுகாக்கக்கூட எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை.

சென்னையின் மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஆனால், இவ்வளவு ஜனத்திரளின் கழிவை 40 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் முறை மூலம் எப்படி வெளியேற்ற முடியும்? பிரச்னையான நேரங்களில் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விடுகிறார்கள். அதனால் கழிவுநீரும் வடியாமல், மழைநீரையும் வடியவிடாமல் செய்கிறது. இந்த ஒழுங்கற்ற முறையைச் சரிபடுத்தாத வரையில் சென்னைக்கு விடிவுகாலம் சாத்தியமே இல்லை. 
மழை நீர் சேமிப்பு
மழைநீர் தேங்காமல் வடிய, சாலைகளில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதையின் கீழே உள்ள அவை, மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி வழிந்தோடும்படி இல்லாமல், சமமாக அமைக்கப்பட்டுள்ளன. இப்படி இருந்தால் தண்ணீர் எப்படி வடியும்? தவிர, வடிகாலையே ஒரு வீடுபோல் நான்கு பக்கமும் சிமென்ட் கலவை வைத்து கட்டுகிறார்கள். அப்படி இல்லாமல் மேற்புறமும் பக்கவாட்டிலும் காங்கிரீட் கலவையால் கட்டிவிட்டு, நிலம் நீரை உறிஞ்ச வசதியாக,தரையில் சிமென்ட் கலவை போடாமல் விட வேண்டும். நீர், நிலத்தால் உறிஞ்சப்படுவதன் மூலமும் மழைநீரைச் சேமிக்கலாம்.
அந்த வடிகாலில் ஒவ்வொரு 50 மீட்டர், 100 மீட்டருக்கு ஓர் இடத்தில் கால் அடி, அரை அடியில் சின்னச்சின்னத் தடுப்புகளை ஏற்படுத்தலாம். அதில் தேங்கும் நீர், நிலத்தால் உறிஞ்சப்படும். அந்தத் தடுப்புகளையும் தாண்டி உயரும் நீர் தானாக வழிந்தோடிவிடும். இப்படி வடியும் மழை நீரைக்கூட,சென்னையில் உள்ள பல்வேறு பூங்காக்களுக்கு நடுவே குட்டைகளை ஏற்படுத்தி அதில் விடலாம். இதையும் தாண்டி வடியும் வெள்ள நீரை, கடலில் கலக்கச்செய்யலாம். ஆனால், ஒவ்வொரு  வீடு,அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு என்பது கட்டாயமாகும்போதுதான் இது சாத்தியம். ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல் தண்ணீரை உறிஞ்சக்கூடிய சாலைகளை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கலாம். அது அதிகச் செலவு பிடிக்கக்கூடியது என்றாலும், அது சாத்தியமானால் ஒட்டுமொத்த சாலைகளுமே மழைநீர் சேகரிப்புப் பைகளாக மாறும்; வெள்ளமும் குறையும்.
நகர கட்டமைப்பு
`இவ்வளவு பேரைத்தான் தாங்கும் என்ற  தாங்குதிறன் ஒவ்வொரு நகருக்கும் உண்டு. பரப்பளவு,உணவு தரும் சக்தி, தண்ணீர் வசதி, கழிவுநீர் அகற்றம் போன்ற பல அம்சங்களைப் பொறுத்து அது அமையும். சென்னை, தன் அதிகபட்சத் தாங்கு திறனைவிட இரு மடங்கு மக்கள்தொகையைக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட பொருளாதார உற்பத்தி முறை. ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யூ என பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவது சென்னையில் இருந்துதான். ஃபோர்டை ராமநாதபுரத்துக்கும், ஹூண்டாயை புதுக்கோட்டைக்கும்,பி.எம்.டபிள்யூவை நாமக்கல்லுக்கும் மாற்றினால், இதில் பாதிப் பிரச்னைகள் குறையும்; ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்கும் அது உதவும். அனைத்துத் தொழில்களையும் சென்னையிலேயே அமைக்க ஊக்குவிப்பது ஏன்?
ஏராளமான ஐ.டி கம்பெனிகள் சென்னயிலேயே உள்ளன. குறிப்பாக ஓ.எம்.ஆர் சாலை ஐ.டி நிறுவனங்கள் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதே இன்டர்நெட் கனெக்டிவிட்டி தொழில்நுட்பத்தை தென்காசி யிலும் மதுரையிலும் திருநெல்வேலியிலும் கொடுத்தால், அவர்கள் அங்கு தொழில்களைத் தொடங்க ஏதுவாக இருக்கும். சென்னைக்கும் இந்த அளவுக்கு அழுத்தம் இருக்காது. இந்த ஒரு வார மழைக்கு 60 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஐ.டி கம்பெனிகள் சொல்கின்றன. தொழிலை தமிழ்நாடு முழுவதும் நிரவிப் பரவலாக்கினால், மக்களும் ஒரே இடத்தில் குவிய மாட்டார்கள்; இழப்பும் தவிர்க்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகள்...
ஊர் எங்கும் குவிந்துகிடக்கும் குப்பைகள் குறித்து அனைவரும் பேசுகிறோம். ஆனால், அவற்றை உருவாக்கியதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. இன்று சென்னையில் ஒரு நாளைக்கு சுமார்6,000 டன் குப்பை உற்பத்தியாகிறது. இது மாநகராட்சியின் தகவல். உண்மை நிலவரம் இதைவிட இன்னொரு மடங்கு இருக்கும். இவ்வளவு குப்பைகளையும் கொடுங்கையூரிலும் பள்ளிக்கரணையிலும் கொட்டுகிறார்கள். அப்படி பள்ளிக்கரணையை அடைத்ததால்தான்,வேளச்சேரியும் மடிப்பாக்கமும் மூழ்கின. குப்பையை `மக்கும், மக்காத குப்பை எனப் பிரித்துத் தர வேண்டும் என்ற உத்தரவு ஏற்கெனவே உள்ளது. ஆனால், நடைமுறையில் அது சிறு சதவிகிதம்கூடச் செயல்பாட்டில் இல்லை. எங்கு குப்பை உற்பத்தியாகிறதோ, அங்கேயே மக்கும் மக்காத குப்பை எனப் பிரித்துக் கொடுத்தால் தவிர, குப்பையை வாங்க மாட்டோம் எனச் சொல்லி,அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சென்னை புரசைவாக்கத்தில் ஒரு வார்டில் மக்கும் குப்பையை மறுசுழற்சி செய்து, அதன் மூலம் மின்சாரம் தயாரித்து, தெரு விளக்குகளை எரியவைக்கிறார்கள். அதை ஓர் உதாரணமாகக் கொண்டு குப்பைக்கு எனத் தனியாக ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இனி தாக்குப்பிடிக்குமா சென்னை?
இந்த மழைக்கும் வெள்ளத்துக்கும் நிலைகுலைந்திருக்கிறது சென்னை. `இனி பருவநிலை மாற்றத்தால் இப்படி அடிக்கடி நிகழலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். சென்னை இனி தன்னை அதற்குத் தயார் செய்துகொள்ள வேண்டும். அரசு அளவில் நீர்நிலைகள் பாதுகாப்பு, வடிகால் முறைகள் போன்றவை மிக வேகமாக  முறைப்படுத்தப்பட வேண்டும். குப்பை மேலாண்மை,மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்கள் உறுதியுடன் செயல்படுத்தப்பட  வேண்டும். முக்கியமாக,அவசரமான பிரச்னை களில் துரிதமாக முடிவெடுக்கவும் உடனடியாக செயல்படவுமான திறன் அரசுக்கு வேண்டும். இந்தத் திறன் இல்லாத அரசு, இந்தப் பேரிடரை அல்ல... எந்தப் பேரிடரையும் சமாளிக்க முடியாது.
அதேநேரம் பொதுமக்களாகிய நாம் செய்ய வேண்டிய சில செயல்களும் உள்ளன. இனியாவது நாம் நீர்நிலையில் வீடு கட்டுவது இல்லை என்பதை உறுதிசெய்வோம். குப்பை மேலாண்மையில் நமது பங்கைத் தட்டிக்கழிக்காமல் செயல்படுத்துவோம். பிளாஸ்டிக் உபயோகத்தைச் சாத்தியமான அனைத்து இடங்களிலும் தவிர்ப்போம். `எல்லாம் அரசு பார்த்துக்கொள்ளும்' என்ற மனப்போக்கில் இருந்து விடுபடுவோம். இனியாவது தனிநபர்களாக சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வோம்.

`அடுத்த வீட்டில் இருப்பவர் செய்வார் என நாம் விடலாம். ஆனால், வெள்ளம் அடுத்த வீட்டில் இருப்பவரை மட்டும் அடித்துச் செல்வது இல்லை. இந்த வெள்ளப் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பு அற்புதமானது. இந்தப் பங்களிப்பை நாம் இந்த வெள்ள இடர் தீர்ந்த பிறகும் செலுத்துவதன் மூலம் மட்டுமே, இன்னொரு பேரிடர் வந்தாலும் இந்தப் பாதிப்பு வராமல் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

வெள்ளம், நமக்கு நிறையப் படிப்பினைகளைத் தந்திருக்கிறது. நம்மில் பல பேருக்கும் நாம் அறியாத நம் அக்கம்பக்கத்தினரையும் அவர்களுடைய கனிவான முகத்தையும் அறிமுகம் செய்திருக்கிறது. சென்னைக்கு என ஒரு குணம் உண்டு. அது இந்த வெள்ளத்தில் அதீதமாக வெளிப்பட்டிருக்கிறது. அந்தக் குணத்தை சென்னையில் வாழும் நாம் ஒவ்வொரும் கைகொள்வோம்... எந்தப் பேரிடரையும் வெல்வோம்!
-பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள்
நன்றி: ஆனந்தவிகடன்

புதன், டிசம்பர் 16, 2015

‘எல் நினோ’ ஏற்படுத்திய பாதிப்பா? வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?


மிழகத்தை சமீபத்தில் உலுக்கியெடுத்த பெருமழைவெள்ளத்தை அடுத்து பதற்றத்துடன் உச்சரிக்கும் வார்த்தை எல் நினோ’. மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு அதுதான் காரணம் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது.
பசிபிக் பெருங்கடலின் கிழக்கில் வெப்ப மண்டலப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறைகடல்மட்ட வெப்பம் சராசரி அளவைவிட2 - 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். இதையொட்டிகடலுக்கு மேற்பகுதியில் உள்ள காற்றின் வெப்பமும் உயரும். இதுவே எல் நினோ எனப்படும். எல் நினோ’ என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு குழந்தை ஏசு’ என்று பொருள். பொதுவாக கிறிஸ்துமஸை ஒட்டியே நிகழ்வதால் இந்தப் பெயர் பெற்றது.
எல் நினோ விளைவால்பசிபிக் கடலின் நீரோட்ட வெப்பம் அதிகரிக்கும்போதுநீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. அதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய காற்று ஆசியப் பகுதியை அடையும்போதுதமிழகத்தின் தென்மேற்குப் பருவமழையை பலவீனப்படுத்தும். அதன் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை வலுவடையும்.
இதனால் இந்திய வானிலையில் அசாதாரண மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அசாதாரணமான மழைப்பொழிவு இருக்கும் என இஸ்ரோ எச்சரிக்கை செய்திருந்தது. ஆனால்இந்திய  வானிலை ஆய்வு மையம் மட்டும் டி.வி மைக்குகள் முன் அமர்ந்து கொண்டு, ‘அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புகனமான மழையோ,லேசான மழையோ பொழிய வாய்ப்பு உண்டு’ என்று சொல்லிக்கொண்டு இருந்தது.

அதே சமயம்சென்னையில் இந்த ஆண்டு பெய்த அதிகப்படியான மழைக்குக் காரணம் எல் நினோவின் தூண்டுதல் என்கிறார்,அமெரிக்காவின் வர்த்தக ரீதியான வானிலை ஆய்வு மைய (Weather underground) விஞ்ஞானி  பேராசிரியர் டாக்டர் ஜெப் மாஸ்டர்ஸ். இவர்அமெரிக்க அரசின் தேசியக் கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு  மையத்துடன் இணைந்து 1986 முதல் 1990 வரை சூறாவளி மற்றும் புயல்களை ஆய்வுசெய்தவர். தனது அதிகாரபூர்வ பிளாக்கில்நவம்பர் மாதத்தில் சென்னையில் மட்டும் 1,218.6மில்லி மீட்டர் அதாவது, 121 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மழை அளவுகடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் நவம்பர் மாத மழைக் கணக்கீட்டில் உச்சபட்சம் என்கிறார். டிசம்பர் 1 - 2 ஆகிய நாட்களில் 24 மணி நேரத்தில் 345 மில்லி மீட்டர் அதாவது, 34 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு முன்னர் 1901 டிசம்பர் 10-ம் தேதி 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 261.1 மில்லி மீட்டர் அதாவது, 26 சென்டி மீட்டர் பெய்துள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் எல் நினோவின் தாக்கம் எப்போதும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ள ஜெப் மாஸ்டர்ஸ்இந்த முறை சென்னையில் பெய்த அதிகபட்ச மழைக்குக் காரணம் எல் நினோ மட்டுமல்ல... இண்டியன் நினோ’ எனப்படும் ‘Indian Ocean Dipole’ என்கிற இந்தியாவின் மேற்குக் கடல்பரப்பில் ஏற்படும் அதிக மற்றும் குறைந்த வெப்பத்தின் தள்ளாட்டம் என்றும் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே மழையின் அளவை மிகச் சரியாகக் கணிக்க முடியாத பெரிய சிக்கலுக்கு இந்திய வானிலை ஆய்வாளர்கள் ஆளாகி உள்ளதாகக் கூறுகிறார்.
சென்னையில் அரசு இயந்திரம் செயலற்ற நிலையில் இருந்தபோதுதன்னார்வலர்கள் களம் இறங்கியதைப்போல பெங்களூரில் வசிக்கும் அமெச்சூர் வானிலை ஆய்வாளர் ஷாஜு சாக்கோகளம் இறங்கி தீபாவளி முதலே தொடர்ச்சியாக செயற்கைக்​கோள் படங்களை ஆய்வுசெய்து ஃபேஸ்புக்கில் கணிப்புகளை எழுதத் தொடங்கினார். மழைப்பொழிவு பற்றிய அவரது கணிப்புகள் சரியாக இருந்தன. அவரைத் தொடர்புகொண்டபோது, ‘‘இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாஇந்தியப் பெருங்கடல்,அரபிக்கடல் என்ற இந்த வட்டத்துக்குள் நிலவும் நிகழ்வுகளை மட்டுமே வைத்து கணிக்கிறது. உலகளாவிய காற்று மற்றும் மேகங்களின் நகர்வுகளைக் கணக்கில் எடுக்காமல்ஒரு சிறிய வட்டத்துக்குள் தன் ஆய்வுகளை நிறுத்திக்கொள்கிறது’’ என்கிறார்.


எல் நினோ என்பது பசிபிக் கடலில் அல்லது ஆண்டுகளுக்கு ஒருமுறை கடல் நீரின் வெப்பம் டிகிரி முதல் டிகிரி வரை சூடாகும் நிகழ்வு. இந்த வெப்ப உயர்வுஇந்தப் பகுதியைக் கடந்துசெல்லும் காற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காற்றுவெப்பம் அல்லது ஈரப்பதம் என எதைச் சுமந்துகொண்டு வந்தாலும்இந்த எல் நினோ விளைவு அதை நிலைகுலைய வைத்துவிடும். இதனால்,இந்தியாவை நோக்கி வரும் காற்றின் தன்மை மாறிகோடை காலத்தில் கடும் வறட்சியை ஏற்படுத்தும். மழைக்காலத்தில் பரவலாகப் பெய்ய வேண்டிய மழை குறிப்பிட்ட ஒரே இடத்தில் பெய்துவிடும்.
1800-ம் ஆண்டில் இருந்து இதுவரை 18 எல் நினோக்களை இந்தியா சந்தித்து உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில்,அதிகபட்சமாக வறட்சியை மட்டுமே இந்தியாவில் உருவாக்கிய எல் நினோஇரண்டு மூன்று முறை மட்டுமே அதிகபட்ச மழையை அளித்துள்ளது. எல் நினோவின் பாதிப்பு இந்தியாவில் 2016-லும் தொடரும் என்கிறது சர்வதேச வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு. மொத்தத்தில் எல் நினோஇந்திய வானிலை ஆய்வாளர்களின் கணிப்பை இந்த முறை சென்னை வெள்ளத்தால் மூழ்கடித்து​விட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டோம். ‘‘இந்த முறை காற்று அழுத்தத் தாழ்வு நிலைகாற்று அழுத்தத் தாழ்வு மண்டலம் எனத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தது. எனினும் நாங்கள் தினசரி மழை பற்றிய தகவல்கள் கொடுத்துக்​கொண்டே இருந்தோம். அதே சமயம்இந்த ஊரில் இத்தனை சென்டி மீட்டர் மழை பொழியும் என்றெல்லாம் கணிக்க முடியாது. காரணம்மேகங்களின் நிலை மாறிக்கொண்டே இருக்கின்றன. எல் நினோவை பொறுத்தவரை இந்த மழைக்கு அதுவும் ஒரு காரணி என்று சொல்லலாம். எல் நினோவை நீண்டகாலத்துக்​கான மழையோவறட்சியோ பற்றிச் சொல்லத்தான்  பயன்படுத்துவார்கள். தினசரி பெய்கின்ற மழைக்கு அதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்’’ என்றார்.

கடல் ஆய்வாளர் ஒடிசா பாலு, ‘‘உண்மையில்வானிலையை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு முழுமையான வளர்ச்சியை நாம் அடையவில்லை. நமது பாரம்பர்ய கணிப்பு முறையில் ஒரு மாதத்துக்கு முன்னரே கணிக்க முடியும். மேலும்தற்போதைய வானிலை ஆய்வு மையம் அந்தமான் பகுதிகன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள பகுதிகள் சார்ந்த புள்ளி விவரங்களைத்​தான் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆனால்இந்தோ - பசிபிக் பரப்பு தொடர்பான வானிலை நிகழ்வுகள் பற்றிய வானிலை அறிக்கைகள் மண்டல அலுவலகங் களுக்கு உடனே வருவதில்லை. அவை வந்து சேரும்போதுவானிலையில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது.
உதாரணத்துக்குகாலை எட்டு மணிக்கு செயற்கைக்கோள் தொடர்பான படம் மற்றும் பிற தகவல்கள் வானிலை ஆய்வு மையத்துக்கு வருகிறது என்றால்அவை முழுவதுமாக ஆராயப்பட்டு மண்டல ஆய்வு மையத்தின் மூலம் வெளியிடும்போது குறைந்தது மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால்மேகத்தின் போக்குகாற்றின் வேகம் ஆகியவை சில நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறைகூட மாறும். மண்டல அலுவலகங்களையும் குறைகூற முடியாது. அனைத்து டேட்டாக்களும் ஒரே நேரத்தில் வந்தால் விரிவாகக் கணிக்க முடியும்’’என்றார்.
விஷ்வா

படம்: சு.குமரேசன்

நன்றி: ஜூனியர்விகடன்

ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு..! தமிழகத்தை விட்டு வெளியேறும் தொழில்கள்...


சென்னையில் மழை வெள்ளம் வடிந்து​விட்டதுஇயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது’ என்று சொல்லிக்​கொண்டிருக்கிறது தமிழக அரசு. சாலைகளில் வாகனங்கள் ஓடுவதையும் வீதிகளில் மக்கள் நடமாடுவதையும் வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பி​விட்டது என்று படம் காண்பிக்கிறார்கள். ஆனால்கிடைத்த பாடம் வேறு.
விவசாயத்துக்கு அடுத்தபடியாகநம் நாட்டின் முதுகெலும்பு என்று கருதப்படும் சிறுகுறுந்தொழில்கள் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயிருப்பதையும்அவற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் நாதியற்று நடுத்தெருவில் நிற்பதையும் பார்த்தால்இயல்பு வாழ்க்கை இயலாமை வாழ்க்கையாகிவிட்டதை உணர முடியும்.

சென்னைகாஞ்சிபுரம்திருவள்ளூர்கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் சிறுகுறுந்தொழில்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எப்போதும் இயந்திரங்களின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும் அம்பத்தூர்அம்பத்தூர் சிட்கோஅத்திப்பட்டுஅயப்பாக்கம்காக்களூர்மறைமலை நகர்திருவொற்றியூர்மணலிவிருத்தாசலம் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் தற்போது கனத்த அமைதி நிலவுகிறது. வேலை எதுவும் இல்லாததால்வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.
அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் மட்டும் 80 கோடி ரூபாய் அளவுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பொறுத்தரை, 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இந்துநாதன். தீபாவளி வரைக்கும் உற்பத்தி நடந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளமும்,போனஸும் கொடுத்தோம். உடனே மழை வந்துவிட்டது. பல தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்கள்,ஜெனரேட்டர்கள்உதிரிபாகங்கள் எல்லாம் சேதம் அடைந்துவிட்டன. சிறிய தொழிற்சாலைகளில் 4 இயந்திரங்கள் வரையிலும்,கொஞ்சம் பெரிய தொழிற்சாலைகளில் 15 இயந்திரங்கள் வரையிலும் உள்ளன. எல்லா இயந்திரங்களும் நாசமாகிவிட்டன. ஒரு இயந்திரத்தின் விலை 30 லட்சம் ரூபாய். இந்தப் பாதிப்புகள் முதல் மழைக்கு. அடுத்த மழை வந்தபோதுஒட்டுமொத்த தொழிற்பேட்டையும் தண்ணீரில் மூழ்கியது. என் கம்பெனிக்குள் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் நின்றது. எனக்கு 6 மோட்​டார்கள் பழுதானதுடன் ஏகப்பட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும். பெரும் நஷ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் சூழலில்எப்படி எங்களால் சம்பளம் கொடுக்க முடியும். சம்பளம் கொடுக்கவில்லை என்றால்தொழிலாளர்கள் வேலைக்கு வரமாட்டார்கள்” என்று கவலையோடு சொன்னார் இந்துநாதன்.
தமிழ்நாட்டின் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கொண்டவை. இந்தத் தொழில்கள்தான்சுமார் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. சென்னைகடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சுமார் 200 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் ஆப்பிரிக்காலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுஇந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் சதவிகிதம். இந்த நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்து மருந்து உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றான கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டைஅடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கியது. ஈக்காடுதாங்கல்கிண்டி பகுதிகளில் உள்ள சிறுகுறுந்தொழிற்சாலைகளில் அடி உயரத்துக்குத் தண்ணீர் நின்றது. இங்கு தொழில் செய்யும் குறுந்தொழில் முனைவோரில் பெரும்பா லானவர்கள் கிட்டத்தட்ட அன்றாடம் காய்ச்சிகள். பத்துக்குப் பத்து அறையில் ஓர் இயந்திரத்தையும்ஒரு தொழிலாளியையும் வைத்துக்கொண்டு தொழில் செய்பவர்கள் நிறையப் பேர். கிடைக்கிற வருமானத்தில் தவணைக்கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டுகூலி கொடுத்துவிட்டு 500ரூபாயுடன் வீட்டுக்குச் செல்பவர்கள்தான் அதிகம். இவர்கள் தங்கள் தொழிலைப் பாதுகாக்க இன்சூரன்ஸ்கூட எடுப்பதில்லை. பெரும்பா லானோர் வாடகை இடத்தில்தான் தொழில் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பரிதாபமான நிலையில் உள்ள தொழில் முனைவோர்களால்இந்தப் பாதிப்பில் இருந்து மீளவே முடியாது” என்கிறார் கிண்டி தொழிற்பேட்டையில் குறுந்தொழில் நடத்தி வருபவரும்தமிழ்நாடு சிறுகுறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சி.பாபு.
ஹுண்டாய்ரினால்ட்பி.எம்.டபிள்யூஃபோர்டு உள்ளிட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கிவரும் கார் உற்பத்தி தொழிற்சாலைகளும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இவர்கள் தங்கள் உற்பத்தியையே நிறுத்திவிட்டார்கள். திருவொற்றியூரில் உள்ள ராயல் என்ஃபீல்டு’ கம்பெனியில் 11,200 மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது,டிசம்பர் மாத விற்பனையை வெகுவாகப் பாதித்து உள்ளது.


இதுதொடர்பாகஅசோசம் அமைப்பின் தமிழக துணைத் தலைவர் டாக்டர் வினோத் சுரானாவிடம் கேட்டோம். அசோசம் கணக்குப்படி தமிழக வெள்ளத்தால் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உடனடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டகாலப் பாதிப்பு என்று பார்த்தால்அது 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் போகும். இந்த இழப்பைச் சரிக்கட்ட முதல் ஆண்டுகள் பிடிக்கும். ஐ.டி. துறை பெரிய அளவில் அடிவாங்கி இருக்கிறது.
கம்பெனிகள் தண்ணீரில் மூழ்கியதால்உடனடியாக 7,500 பேரை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றினார்கள். இனிமேல் சென்னைக்கு ஐ.டி. கம்பெனிகள் வருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. சென்னை உகந்த இடம் அல்ல என்று பலரும் நினைக்கிறார்கள். இதை​யெல்லாம் கணக்கில் எடுத்தால்இது மிகப் பெரிய பாதிப்பு. ஆட்டோ மொபைல் துறை பாதிக்கப்​பட்டுள்ளது. ஒரு கார் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால், 6 ஆயிரம் கோடி முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஆகிறது. இப்போது ஆட்டோமொபைல் துறை ஒட்டுமொத்தமாக அடிபட்டுவிட்டது. பல தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்களுக்குள் எல்லாம் தண்ணீர் போயிருக்கிறது.
பெரிய கம்பெனிகளுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆனால்சேதாரங்களை மதிப்பீடு செய்து இன்சூரன்ஸ் தொகை கிடைக்க6 முதல் 12 மாதங்கள் பிடிக்கும். கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் இருப்பதால்இந்தப் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். இங்கு ஆட்டோமொபைல் தொழில் நடத்துபவர்கள்தங்களது இரண்டாவது தொழிற்சாலையை வேறு மாநிலங்களில் ஆரம்பிப்பது தொடர்பாக யோசித்து வருகிறார்கள். மாநிலத்தின் தொழிற்கொள்கை முதலீட்டாளர்களுக்கு இணக்கமாக இல்லை என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசிவருகிறார்கள். எனவேவேறு இடத்தைப் பார்க்கலாம் என்று அவர்கள் யோசித்துக்​கொண்டிருந்தார்கள். இந்த வேளையில்தான்வெளியே போவதற்கான முடிவை எடுப்பதற்கு வெள்ளம் ஒரு காரணமாக ஆகிவிட்டது. இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறார்கள்” என்கிறார்.
பெரிய கம்பெனிகளுக்கு பல மாதங்களுக்குப் பிறகாவது இன்சூரன்ஸ் கிடைக்கும். ஆனால் சிறுகுறுந்தொழில் முனைவோரைப் பொறுத்த அளவில்அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை. எனவேஇந்தப் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வது மிகவும் சிரமம்.
நிம்மதியாகச் சாப்பிட்டு ஒரு மாதம் ஆகிறது. தொழில் துறை அமைச்சர் மோகன் இரண்டு மூன்று தடவை இங்கு வந்தார். மத்திய அமைச்சர்கள் வந்தார்கள். தொழிற்​கூடங்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைப் பார்த்துவிட்டுமனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். அமைச்சர்கள் வந்து பார்வையிடு​வதாலோஆறுதல் சொல்வதாலோ எங்களுக்கு என்ன பிரயோஜனம்மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று அவர்கள் சொல்வதால் மட்டுமே எங்கள் பிரச்னை தீர்ந்துவிடுமா?இந்தப் பாதிப்பில் இருந்து நாங்கள் மீண்டு வரவேண்டும் என்றால்எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்கிறார் குறுந்தொழில் முனைவோர் ஒருவர்.
சிறுகுறுந்தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், 5 லட்சம் ரூபாய் வரை சுலபத் தவணையில் வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் வைத்துள்ளனர். அவற்றை நிறைவேற்றினால் மட்டுமேதமிழ்நாட்டில் சிறுகுறுநடுத்தரத் தொழில்கள் இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டிய தமிழக முதல்வர்அந்நிய முதலீடு ஒரு லட்சம் கோடியும்தமிழ்நாடு முதலீடு 10 ஆயிரம் கோடியும் வரும் என்று சொன்னார். சிறுகுறு தொழில்களை இந்தப் பாதிப்பில் இருந்து தூக்கி நிறுத்தவில்லை என்றால்ஒரு பைசா முதலீடுகூட தமிழ்நாட்டுக்கு வராது.

ஆ.பழனியப்பன்

படங்கள்: தி.ஹரிஹரன்

நன்றி: ஜூனியர்விகடன்