புதன், டிசம்பர் 10, 2008

மரபணு மாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் 9-12-2008 செவ்வாய் அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.



அப்போது அவர், "மரபணு மாற்று உணவுப்பொருட்களால் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுமா? என்பது குறித்த ஆய்வுகளை நடத்தாமல் மரபணு மாற்று உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது " என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக மரபணுமாற்றப்பட்ட கத்தரிக்காய் வகைகளை இந்திய சந்தையில் எந்த விதமான பாதுகாப்பு சோதனைகளும் நடத்தாமல் அறிமுகப்படுத்துவதற்கு சில தரப்பில் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மரபணு மாற்று தொழில்நுட்பத்தை வேளாண்மையில் புகுத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு சோதனைகள் எதுவும் நடத்தாமல் மரபணு மாற்று உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதை மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதிக்காது என்றும் அவர் உறுதி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அன்புமணி்க்கு நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் அவரது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்: hfm@alpha.nic.in

நன்றி: தி ஹிந்து, தினமணி, தினத்தந்தி

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//"மரபணு மாற்று உணவுப்பொருட்களால் மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுமா? என்பது குறித்த ஆய்வுகளை நடத்தாமல் மரபணு மாற்று உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது " //

If its true, it should be banned in total.

But if Dr.Anbumani Ramadoss takes any action he may face some difficulties, as he experienced in AIIMS case.

Because many brahmins like M.S.Swaminathan are working behind the Agri-MNCs. They may kick Mr.Anbumani from his post.

பெயரில்லா சொன்னது…

mikka nalla seithi...vallga anbumani....

பெயரில்லா சொன்னது…

இடஒதுக்கீடு, பொது இடங்களில் புகை பிடிக்கத்தடை போன்ற முக்கிய விவகாரங்களில் துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் அன்புமணியின் இந்த அறிவிப்பு வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அரசியல் நிலை கருதி பல்வேறு கட்சிகளும் இந்த அறிவிப்பு குறித்து கருத்து வெளியிடாத நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைச்சருக்கு நன்று பாராட்டுவது வரவேற்கத்தக்கது.

தொடரட்டும் உங்கள் சேவை.

கருத்துரையிடுக